சிவகார்த்திகேயனுக்காக விட்டுக் கொடுத்த அனிருத்: எதை விட்டுக் கொடுத்தார்?
Recommended Video

சென்னை: இசையமைப்பாளர் அனிருத் தனது நண்பர் சிவகார்த்திகேயனுக்காக விட்டுக் கொடுத்து திட்டம் போடத் தெரியல பாடல் வீடியோவை காலதாமதமாக வெளியிட்டுள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகிபாபு, சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தில் வரும் திட்டம் போடத் தெரியல பாடல் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அறிவிப்புக்கு மாறாக நேற்று தான் பாடலை வெளியிட்டனர்.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 3ம் தேதி நடந்தது. மேலும் அன்று இரவு 8 மணிக்கு சீமராஜா டீஸரும் வெளியிடப்பட்டது. சீமராஜா டீஸர் வெளியீட்டை முன்னிட்டு அனிருத் தனது பாடல் வீடியோ வெளியீட்டை ஒத்திப் போட்டார். இதை அவர் தனது நண்பர் சிவகார்த்திகேயனுக்காக செய்தார்.
நட்பு
அனிருத் தனக்காக விட்டுக் கொடுத்ததை பார்த்த சிவகார்த்திகேயன் ரொம்ப நன்றி நண்பா. உன் திட்டம் போடத் தெரியல பாடல் கலக்கப் போகிறது என்று கூறி வாழ்த்தினார்.
ஹிட்
சீமராஜா டீஸரை பார்த்த அனிருத் ஹிட்டோ ஹிட் என்று அனிருத் ட்வீட்டினார். இவர்களின் நட்பை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என்று பாராட்டினார்கள்.
பாடல்
அனிருத் இசையமைத்து, பாடி, நடித்த திட்டம் போடத் தெரியல பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











