»   »  தனுஷுக்கு போட்டியாக மஸ்டாங் கார் வாங்கிய அனிருத்!

தனுஷுக்கு போட்டியாக மஸ்டாங் கார் வாங்கிய அனிருத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உலகமே அனிருத் வீடியோ என்று சொல்லப்பட்ட ஒரு உவ்வே வீடியோவை பார்த்து களித்தும் கரித்துக் கொட்டிக்கொண்டும் இருக்க அவரோ அதை பற்றியெல்லாம் கவலையே படாமல் புது கார் வாங்கியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், தனுஷ் என்று கார் பிரியர்கள் அதிகம். அந்த வரிசையில் அனிருத்தும் சேர்ந்திருக்கிறார். லேட்டஸ்டாக அனிருத் வாங்கியிருக்கும் கார் 'ஃபோர்ட் மஸ்டாங்'. சும்மா 250 கிலோமீட்டர் வேகத்துல பிச்சுகிட்டு போகுமாம்.

Anirudh's new inmate

விலை அதிகம் இல்லை ஜஸ்ட் 80 லட்சம்தான் ஜென்டில்மேன்! ஏற்கனவே இந்த கார் தனுஷ்கிட்ட ஒண்ணு இருக்கு.

இந்தியாவிலேயே இந்த காரை முதலில் வாங்கியது ஹாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி.

அனிருத் சைஸுக்கு இதை விட வேகமா கூடப் பறக்கலாமே?! என கமெண்ட் அடித்தாராம் முன்னாள் நண்பர் விஷயம் கேள்விப்பட்டு.

English summary
Recently Aniruth has purchased a new Ford Mustang car which can drive 250 km fast and priced 80 lakhs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil