ஜெயிலர் ஹுக்கும் பாடல்.. ரஜினிக்காக மட்டுமில்லை தோனிக்காகவும்தான் உருவாக்கினோம்.. அனிருத் ஓபன் டாக்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இப்போது அவர்தான் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கடைசியாக அவரது இசையமைப்பில் வேட்டையன், இந்தியன் 2, தேவரா, விடாமுயற்சி உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெளியாகின. அடுத்ததாக கூலி, ஜன நாயகன் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்தச் சூழலில் நேற்று ஐபிஎல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. அதனையொட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெர்ஃபார்ம் செய்தார் அனிருத்.
ரஜினியின் உறவினரான அனிருத் தனுஷ் நடிப்பில் உருவான 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஐஸ்வர்யா இயக்கியிருந்த அந்தப் படம் வசூல் ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது. முக்கியமாக அனிருத்தின் இசை மெகா ஹிட்டடித்தது. ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி முதல் படமான ரோஜாவில் சென்சேஷன் ஆனாரோ அதேபொல் 3 படத்திலும் ரீ ரெக்கார்டிங், பாடல்கள் என அனைத்திலுமே தனது தனித்த முத்திரையை பதித்தார்.
ஓவர் நைட்டில் ஃபேமஸ்: 3 படத்தின் ஆல்பத்தில் எல்லா பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தாலும்; ஒய் திஸ் கொலவெறி பாடல் மெகா ஹிட்டானது. இதன் காரணமாக ஒரே நைட்டில் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும் அனிருத் சந்திக்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது. அந்தப் பாடலின் வெற்றிக்கு பிறகு அனிருத் ஓவர் நைட்டில் ஃபேமஸ் ஆனார்.

தொடர் வாய்ப்புகள்: முதல் பட பாடல்களின் வெற்றிக்கு பிறகு எங்கும் அனிருத் மயமாகத்தான் இருந்தது. இளம் ஹீரோக்கள் முதல் வளர்ந்த ஹீரோக்கள் வரை அனிருத்திடம் சென்றனர். முக்கியமாக தளபதி விஜய் படம் என்றாலே அனிருத் தான் என்று ஃபிக்ஸ் செய்யப்பட்டுவிட்டது. கடைசியாக வெளியான விஜய் படங்களில் வாரிசு, GOAT படம் தவிர்த்து மற்ற எல்லா படங்களுக்குமே அனிருத்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இசையமைக்கும் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கின்றன.
அடுத்த படங்கள்: அனிருத் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் கால் பதித்துவிட்டார். அப்படி அவர் ஹிந்தியில் இசையமைத்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதில் அனியின் இசையும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது. அதேசமயம் தெலுங்கில் வெளியான தேவரா பெரிய வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக அவரது இசையமைப்பில் தமிழில் கூலி, ஜன நாயகன், ஜெயிலர் 2 உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சேப்பாக்கத்தில் அனிருத்: சூழல் இப்படி இருக்க ஐபிஎல் போட்டிகள் நேற்று முன்தினத்திலிருந்து தொடங்கியிருக்கின்றன. நேற்றைய போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இரண்டு அணிகளுக்கும் இந்த சீசனில் இதுதான் முதல் போட்டி. இதனையொட்டி அனிருத்தின் இசை கச்சேரி மைதானத்தில் நடைபெற்றது. அதில் தான் இசையமைத்த பல பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். இந்நிலையில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
அனிருத்தின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "ஒரு சென்னைக்காரனாக சேப்பாக்கம் மைதானத்தில் பெர்ஃபார்ம் செய்ய வேண்டும் என்பது எனது கனவு. தொடக்கத்தில் இருந்தே நான் தோனியின் தீவிரமான ரசிகன். ஜெயிலர் திரைப்படத்துக்காக ஹுக்கும் பாடலை உருவாக்கும்போதே இந்தப் பாடல் தோனிக்கும் பொருந்தும்படி இருக்க வேண்டும் என்று கூறினேன். கடந்த வருடம் தோனி மைதானத்துக்குள் வந்தபோது இந்தப் பாடலை ஒலிபரப்பினார்கள். அப்போது எவ்வளவு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது என்பதை அனைவருமே அறிவோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











