அனிருத்தின் 'தனி வழி': 6 படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தார்
சென்னை: இசையமைப்பாளர் அனிருத் 6 படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டாராம்.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்த 3 படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் இசையமைப்பாளர் அனிருத். முதல் படத்திலேயே ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் மூலம் பிரபலம் ஆனார்.
இதையடுத்து அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன.

ஹாட்ரிக்
அனிருத் 3, எதிர்நீச்சல் மற்றும் வணக்கம் சென்னை என தொடர்ந்து 3 படங்களில் ஹிட் பாடல்கள் கொடுத்தார். இதையடுத்து அவருக்கு மவுசும் கூடிவிட்டது.

3 படங்கள்
அனிருத் தற்போது தனுஷின் வேலையில்லா பட்டதாரி, சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ஆகிய 3 படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.

விலகல்
பாலாஜி மோகன் இயக்கும் வாய் மூடி பேசவா மற்றும் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் தமிழில் நடிக்கும் படம் ஆகியவற்றுக்கு இசையமைக்க அனிருத்தை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் அவர் அந்த 2 படங்களில் இருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பிக் கொடுத்துவிட்டாராம்.

6 படங்கள்
அனிருத் மொத்தம் 6 படங்களுக்கு இசையமைக்க வாங்கிய முன்பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டாராம். வருகிற படங்களுக்கு எல்லாம் இசையமைக்காமல் குறிப்பிட்ட படங்களுக்கு இசையமைத்து இந்த துறையில் சிறந்த நபர் என்று பெயர் எடுக்க நினைக்கிறாராம் அனிருத். அதனால் தான் 6 படங்களில் இருந்து விலகியுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











