முனி 3யில் 'கொலவெறி' அனிருத்!

முதலில் இந்தப் படத்துக்கு விஜய் ஆன்டனி இசையமைப்பார் என அறிவித்திருந்தார் ராகவா லாரன்ஸ்.
ஆனால் இடையில் என்ன நடந்ததோ... இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளார். கொலவெறி புகழ் அனிருத் ரவிச்சந்திரன் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
'ஆமாம்... முனி 3-க்கு ஒப்பந்தமாகியிருப்பது உண்மைதான். இதன் தமிழ், தெலுங்கு இரண்டு பதிப்புகளுக்குமே நான்தான் இசை அமைக்கிறேன். மிகவும் சந்தோஷமாக உள்ளது," என்று அனிருத் பதிலளித்துள்ளார்.
முனி படத்தின் முதல் பாகத்துக்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். இரண்டாம் பாகமான காஞ்சனாவுக்கு தமன் இசையமைத்தார்.
இப்போது மூன்றாம் பாகத்துக்கு அனிருத் வந்திருக்கிறார். அவர் இசையமைக்கும் முதல் தெலுங்குப் படமும் இதுதான்.
Comments


Click it and Unblock the Notifications