கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்கிய அனிருத்.. திருவண்ணாமலையில் சாமி தரிசனம்.. என்ன விசேஷம்?
சென்னை: ராக்ஸ்டார் அனிருத் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை நேற்று தரிசனம் செய்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையில் அவர் நடந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கியுள்ளார்.
நடிகர் ரவிச்சந்திரனின் மகனான அனிருத்துக்கு இப்போ 35 வயதாகிறது. இன்னமும் திருமணம் செய்யாமல் ஜாலியான முரட்டு சிங்கிளாக சுற்றி வரும் அனிருத்தை சுற்றி சில காதல் கிசுகிசுக்களும் வதந்திகளும் உலா வந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

நடிகை ஆண்ட்ரியாவை காதலித்து வந்தார் என்றும் இருவரும் பிரேக்கப் செய்துக் கொண்டனர் என்றும் கூறப்பட்டது. பாடகி ஜொனிதா காந்தியுடன் டேட்டிங், காவ்யா மாறன் உடன் டேட்டிங் என ஏகப்பட்ட கிசுகிசுக்கள் சுற்றி வந்தாலும், இசை துறையில் செம பிசியாக தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.
ரிலீஸ் ஆகாத ஜனநாயகன்: இந்த ஆண்டு ஆரம்பமே அனிருத்துக்கு ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த படத்துக்காக அவசர அவசரமாக தூங்காமல் கூட வேலை பார்த்த அனிருத் கடைசியாக படம் வெளியாகாத நிலையில், கடும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்ததாக ஷாருக்கானின் கிங் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் காவாலா, ஹுகும் போன்ற பாடல்களை பின்னுக்குத்தள்ளும் அளவுக்கு புதிய இசையை அனிருத் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னதானம் வழங்கிய அனிருத்: திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று சென்ற இசையமைப்பாளர் அனிருத். அங்கே கிரிவலப் பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய புகைப்படம் ஒன்றை திருவண்ணாமலையில் தொடர்ந்து அன்னதான சேவையை நடத்தி வரும் முருகன் அருணாச்சலா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சாமி தரிசனம்: மேலும், அனிருத் திருவண்ணாமலை கோயிலில் சாமி தரிசனம் செய்த போதும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் முருகன் வெளியிட்டுள்ளார். அடிக்கடி திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்வதை அனிருத் வாடிக்கையாக கொண்டுள்ளார். இசைஞானி இளையராஜா போலவே அனிருத்துக்கும் திருவண்ணாமலை ஃபேவரைட் கோயிலாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











