கூலி படம் எப்படி இருக்கு?.. பிரபலம் சொன்ன விமர்சனம்.. லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த சீக்ரெட்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருப்பதால் இப்போதிருந்தே படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர். அந்தவகையில் தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூலி படம் பார்த்த அனிருத் என்ன கூறினார் என்பது தொடர்பாக தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இப்போதைக்கு ஓவர் ஹைப்பில் இருக்கும் படம் என்றால் அது கூலி. ரஜினியும், லோகேஷும் முதன்முறையாக இணைந்திருக்கிறார்கள். மேலும் சத்யராஜ், நாகார்ஜுனா, அமீர் கான், சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் என பலர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இறங்கியிருப்பதால் அனைவருக்குமான ஸ்க்ரீன் ஸ்பேஸ் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.
அடுத்த மாதம் ரிலீஸ்: படமானது அடுத்த மாதம் 14ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை படத்திலிருந்து வெளியான மூன்று சிங்கிள்களில் ஒன்று மட்டுமே ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. மற்ற இரண்டும் சுமார் ரகம்தான் என்ற விமர்சனத்தை பெற்றிருக்கிறது. மோனிகா பாடல் மட்டும் பூஜா ஹெக்டேவுக்காக பலருக்கும் வைப் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

ஆடியோ ரிலீஸ்: படத்தின் ஆடியோ ரிலீஸானது ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. இசை வெளியீட்டு விழா என்றாலே ரஜினியின் பேச்சு எப்போதுமே அட்டகாசமாக இருக்கும். அதிலும் இந்தப் படத்தை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்; கமல்ஹாசனின் தீவிர ரசிகர். எனவே இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சில் கண்டிப்பாக ஏகப்பட்ட ஃபன் இருக்கப்போகிறது என்பது பலரது ஆரூடம்.
ரஜினி சொன்னது: முக்கியமாக ரஜினியிடம் சென்று தான் கமலின் ரசிகர் என்று சொன்னதாகவும்; அதற்கு ரஜினியோ, 'உங்களை ஆடியோ வெளியீட்டு விழாவில் பார்த்துக்கொள்கிறேன்' என ஜாலியாக கூறியதாகவும் லோகேஷ் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். பட ரிலீஸுக்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருப்பதால்; படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. அந்தவகையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார் லோகேஷ்.
அனிருத் என்ன சொன்னார்: அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில், "கூலி திரைப்படத்தை அனிருத்தும் அவரது நண்பர்களும் பார்த்துவிட்டார்கள். படத்தை பார்த்த அவர்கள், 'படம் எங்களுக்கு பயங்கரமாக பிடித்திருக்கிறது' என என்னிடம் சொன்னர்கள். அதுமட்டுமின்றி உங்களது பணிகளிலேயே இதுதான் சிறந்ததாக இருக்கிறது எனவும் சொன்னார்கள்" என்றார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்களோ, பேட்டிக்கு பேட்டி கொஞ்சம் ஹைப் படம் பற்றி ஏறிக்கொண்டு போகிறதே; முரட்டு அடி வாங்காமல் இருந்தால் சரிதான் என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











