ட்ரண்டிங்கில் பட்டையை கிளப்புது.. சும்மாகிழி மாஸ்அப் வீடியோ!

Recommended Video

DARBAR Chumma Kizhi Lyric Video explained | Rajinikanth | A.R. Murugadoss | Anirudh | SPB

சென்னை : தர்பார் படத்தின் சும்மாகிழி பாடலை அனைத்து நடிகர்களின் மாஸ்அப் வீடியோவை அனிரூத் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இணையத்தில் வைரலாகி வரும் இந்த "சும்மா கிழி சாங்க்" செம ட்ரண்டிங்கில் உள்ளது. அருமையாக இந்த வீடியோவை எடிட் செய்த எடிட்டருக்கு வாழ்த்துகள் என்று ஹாஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்

 Anirudh shared the mashup video of the summa kizhi song on his Twitter.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தான் தர்பார். பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும், இப்படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, சுனில் ஷெட்டி ,நிவேதா தாமஸ் ,யோகி பாபு, தம்பி ராமையா, ஶ்ரீமன் ,பிரட்டேக் பாபர் ,ஜட்டின் சர்னா ,நவாப் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் முதல் பாடலான 'சும்மா கிழி' பாடல் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் மிக பெரிய டிரென்ட் ஆனது. இந்த பாடலை எஸ்.பி.பி மற்றும் அனிரூத் பாடியிருந்தனர் .இந்த பாடலுக்கு பாடலாசிரியர் விவேக் வரிகள் அமைத்து இருந்தார் .

இனணயத்தில் வெளியானது முதல் டிரெண்டிங் நம்பர் 1லிலே சும்மா கிழி பாடல் இருந்தது, தமிழில் வெளியாகிய அதே நேரத்தில் தெலுங்கிலும் இந்த பாடல் தும்மு தோலி என்ற பெயரில் வெளியிடபட்டது. தமிழில் மட்டும் மல்ல தெலுங்கிலும் இந்த பாடலை பட்டையைகிளப்பி 23லட்சத்திற்கும் அதிகமாக பார்த்துள்ளனர்.

ஆர்.சி.எம் புரோமா மற்றும் ரீமிக்ஸ் என்ற யூடியூப் பக்கத்தின் சார்பில் "சும்மா கிழி" பாடல் தமிழின் அனைத்து முன்னனி நடிகர்களை வைத்து மிக்ஸ் செய்யபட்டு பதிவேற்ற பட்டிருக்கிறது.

இதில் ரஜினி,விஜய் ,அஜித்,சூர்யா, விக்ரம் ,விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் பாடிய வீடியோக்களை சும்மாகிழி பாடலுடன் இணைத்து வீடியோவை எடிட் செய்து அனிரூத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "சும்மாகிழி"மாஸ்அப் வீடியோ இணையத்தில் வைரலாகி செம கிழிகிழினு கிழிக்குது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X