ரஜினிகாந்த் இவ்வளவு எளிமையானவரா?..20,000 ரூபாய்க்காக அவர் என்ன செஞ்சாரு தெரியுமா?.. அனிருத் ஷேரிங்ஸ்

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்ற சூழலில்;அடுத்ததாக அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டு; நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்த இரண்டு படங்கள் மீதும் உச்சக்கட்ட நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் அவரும் அவரது ரசிகர்களும் வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் ரஜினி குறித்து அனிருத் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ரஜினிகாந்த் இந்த வயதிலும் பிஸியாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்தார். அந்த ஷூட்டிங்கை முடித்த அவர் இப்போது ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி உலக அளவில் 700 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. எனவே படத்தின் இரண்டாம் பாகம் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

Rajinikanth Anirudh Coolie

ரஜினிகாந்த்தின் குடும்பம்: ரஜின்காந்த் லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக ரஜினியை பேட்டி எடுக்க லதா சென்றபோது இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு பிறகு காதலாக மாறியது. இருவருக்கும் திருப்பதியில் வைத்துதான் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள் இருக்கிறார்கள். இரண்டு பேருமே சினிமாவில்தான் இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே தோல்வி படங்களாக அமைந்தன. முக்கியமாக லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அதேபோல் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் முதலில் கோச்சடையான் படத்தை இயக்கினார். அதனையடுத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார்.

விவாகரத்து பெற்ற ரஜினியின் மகள்: இதற்கிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் இப்போது விவாகரத்து பெற்று பிரிந்திருக்கிறார்கள். அதேபோல் சௌந்தர்யாவும் முதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்று; அடுத்ததாக விசாகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது மகளுக்கு போலவே மூத்த மகளுக்கும் இன்னொரு திருமணத்தை ரஜினிகாந்த் செய்து வைப்பாரா என்ற கேள்வியும் பலரிடம் எழுந்திருக்கிறது.

அனிருத் ஷேரிங்ஸ்: இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து இசையமைப்பாளர் அனிருத் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், "சினிமா ஹீரோக்கள் என்றால் வசதியான ரூமில் தங்குவதற்கானே விரும்புவார்கள். ஆனால் ரஜினியோ அப்படியில்லை. ஒருமுறை அவர் லண்டனுக்கு செல்வதாக இருந்தது. லண்டனில் அவர் தங்குவதர்கு ஒரு ரூம் புக் செய்யப்பட்டிருந்தது.

20,000 ரூபாய்: அந்த ரூமின் வாடகை ஒரு இரவுக்கு 20,000 ரூபாய். இதனை தெரிந்துகொண்ட ரஜினியோ என்னது ஒரு நைட்டுக்கு 20,000 ரூபாயா? என்று கேட்டு லண்டனுக்கு செல்வதற்கு புக் செய்யப்பட்டிருந்த டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டார். அவரிடம் நான் சிறு வயதிலிருந்து இப்படியான விஷயங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். எனவே அதிகம் செலவழிக்க வேண்டுமென்றாலே எனக்கு ஒரு மாதிரியாக இருக்கும்" என்றார்.அனிருத்தை பொறுத்தவரை ரஜினியின் கூலி, ஜெயிலர் 2 ஆகிய இரண்டு படங்களுக்கும் இப்போது இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X