24 மணிநேரமும் கத்தியை 'ஷார்ப்' ஆக்கும் அனிருத்
சென்னை: 24 மணிநேரமும் கத்தியை கூர்மைப்படுத்துவதாக படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள கத்தி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே அது குறித்து இசையமைப்பாளர் அனிருத் அவ்வப்போது ட்வீட் செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் கத்தி பற்றி ட்விட்டரில் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

கூர்மை
ஹலோ ஸ்டுடியோவில் இருந்து...கத்தி பிஜிஎம்-க்காக 24 மணிநேரமும் பணிபுரிகிறேன். கத்தியை கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார் அனிருத்.

ஹிட்
அனிருத் இசையில் வெளியிடப்பட்ட கத்தி பட பாடல்கள் ஹிட்டாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா
கத்தி படம் தமிழகத்தை போன்று கேரளாவிலும் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. கேரளாவில் மட்டும் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் ரிலீஸாகிறது.

ஜில்லா
முன்னதாக விஜய், மோகன்லால் நடித்த ஜில்லா படம் கேரளாவில் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











