TTF Vasan - டிடிஎஃப் வாசனுக்கு குரல் கொடுக்கும் அனிருத்.. இது என்ன புது கதை?
சென்னை: TTF Vasan (டிடிஎஃப் வாசன்) டிடிஎஃப் வாசன் நடிக்கும் மஞ்சள் வீரன் படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் வாசன். இவர் தனது பைக்கில் பல இடங்களுக்கு ரைட் செல்வதையும், அதை தனது யூட்யூப் சேனலில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.டிடிஎஃப் வாசன் என அழைக்கப்படுகிறார்.

வாசன் பிறந்தநாள்: இவரது யூட்யூப் சேனலுக்கு ஏராளமானோர் சப்ஸ்க்ரைபர்களாக இருக்கின்றனர். சினிமா பிரபலத்துக்கு இணையாக 2k கிட்ஸ் மத்தியில் இவருக்கு மவுசு இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் முன்பு தனியார் ஹோட்டலில் வாசன் பிறந்தநாளை முன்னிட்டு பலர் அங்கு கூடினர். அதை பார்த்தவர்கள் இவர் என்ன சினிமா பிரபலமா என்று கேள்விகளை கேட்டனர். அந்த அளவுக்கு கூட்டம் கூடியது.
சர்ச்சை: டிடிஎஃப் வாசன் எவ்வளவுக்கு எவ்வளவு புகழடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சையும் அவரை சுற்றி வட்டமிடுகிறது. மேலும், வாசனை கண்டு பல சிறுவர்கள் லட்சக்கணக்கிலான ரூபாய் மதிப்புடைய பைக் மேல் மோகம் கொண்டு வாங்கிக்கொடுக்கும்படி வீட்டில் நச்சரிப்பது, அப்படியே பைக் வாங்கினாலும் அசுர வேகத்தில் சென்று விபத்தை சந்திப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் தனது ரசிகர்கள் என கூறிக்கொண்டு பலரின் புகைப்படங்களை வாசன் அவரது முதுகில் அண்மையில் பச்சைக் குத்திக்கொண்டார். இதனையடுத்து சமூக வலைதளங்கள் முழுக்க வாசன் வாசமே அடித்தது.
வழக்குகள்: தொடர்ந்து ரைட் சென்றுகொண்டிருந்த அவர் குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் சென்றதால் பல வழக்குகளை வாங்கியிருக்கிறார். மேலும் காவல் நிலையத்துக்கு வரும்போது கோட் சூட்டுடன் ஒரு பாடலுடன் வீடியோ போட்டதும் சர்ச்சையானது. அதேபோல் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது பாதியில் கிளம்பிப்போனது பலரால் ட்ரோல் செய்யப்பட்டது.
சமீபத்திய சர்ச்சை: சமீபத்தில்கூட சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் டிடிஎஃப் வாசன் சென்ற கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியது. அதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. ஆனால் அந்தக் காரை தான் ஓட்டவில்லை என்றும்; தன் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள் என்றும் டிடிஎஃப் வாசன் வீடியோவும் வெளியிட்டிருந்தார்.

ஹீரோ வாசன்: சூழல் இவ்வாறு இருக்க படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார் டிடிஎஃப் வாசன். செல்வம் என்பவர் இயக்கும் படத்துக்கு மஞ்சள் வீரன் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. படத்தை தி பட்ஜ்ரெட் பிலிம் கம்பெனி தயாரித்திருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வாசன் பிறந்தநாளான கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியானது. ஷூட்டிங் தொடங்கி நடந்துவருகிறது.
பாடல் பாடும் அனிருத்?: இந்நிலையில் மஞ்சள் வீரன் படம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தில் டிடிஎஃப் வாசனுக்கான அறிமுக பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடவிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது எந்த அளவு உண்மை என தெரியவில்லை. இதற்கிடையே நிச்சயம் இந்தப் படம் மெகா ஹிட்டாகும்; தேசிய விருது பெறும் என படத்தின் இயக்குநர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











