நண்பன் ஹரிஷ்காக பெப்பி பாடல் பாடிய அனிருத் - இன்று வெளியீடு
சென்னை: தனுசு ராசி நேயர்களே படத்தில் ஹரிஷ் கல்யாண் , டிகங்கனா , ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான். படத்தை ஸ்ரீ கோகுலம் பிக்சர்ஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்து இருக்கிறார் . 'குணா', 'மகாநதி' போன்ற வெற்றி படங்களை இயக்கிய சந்தன பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இப்படத்தை இயக்குகிறார்.
ஹரிஷ் கல்யாண் சிந்து சமவெளி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். அதற்கு பிறகு நடித்த படங்கள் தோல்வியை சந்தித்ததால் பிக் பாஸ் 1ல் பங்கு கொண்டார் நல்ல பெயர் பெற்றார்.

அதற்கு பிறகு அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. ஹரிஷ் நடித்த பியார் பிரேமா காதல் மற்றும் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படங்கள் நல்ல வெற்றி பெற்றன. அதை தொடர்ந்து தற்போது தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற 'ஜெர்சி' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஹரிஷ் கல்யாண். தனுசு ராசி நேயர்களே படத்தில் பிகில் படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார்கள்.
இயக்குனராக இப்படம் மூலம் அறிமுகமாகியுள்ள சஞ்சய் பாரதி சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அவர் இயக்க போகும் முதல் படம் இது தான்.
ஜிப்ரான் இசையமைப்பில் பாடல்கள் மிகவும் அற்புதமாக வந்துள்ளது. அந்த வகையில் தற்போது தனுசு ராசி நேயர்களே படத்தில் இருந்து முதல் பாடல் 'ஐ வாண்ட் ஏ கேர்ள்' சிங்கில் டிராக்காக ரீலிஸ் ஆகவுள்ளது. இந்த பெப்பியான பாடலை அனிருத் பாடியுள்ளார். இவர்கள் காம்போவில் ஏற்கனவே 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' திரைப்படத்தில் அனிருத் பாடிய கண்ணம்மா பாடல் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
ஜிப்ரான் இசையில் அ னிருத் பாடிய 'ஐ வாண்ட் ஏ கேர்ள்' சிங்கில் டிராக் இந்த பாடல் நாளை காலை 11 மணியளவில் வெளியிடப்படவுள்ளது. இந்த பெப்பியான பாடல் நிச்சயம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெரும்.
இதற்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் அனிரூத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.
இதற்கு முன் ஹரிஷ் கல்யாணுக்காக 'ஆள சாச்சு புட்டா' மற்றும் 'கண்ணம்மா' பாடலை பாடியிருந்தார் அனிரூத் .அந்த இரு பாடல்களும் சூப்பர் ஹிட். அதே போல் 'ஐ வாண்ட் ஏ கேர்ள்' பாடலும் ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











