twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வில்லேஜ் டிக்கெட் திருவிழா.. குதிரை வண்டியில் மாஸ் காட்டிய அனிரூத் !

    |

    சென்னை: இசையமைப்பாளரும் பாடகருமான அனிரூத் வில்லேஜ் டிக்கெட் எனும் கிராமத்து திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    அனிருத் தற்போது மாஸ்டர் படத்திற்கு இசையமைத்து வருகிறார். அனிருத் பல சமயங்களில் பாடல் விழாக்களை நடத்தி அதில் பங்கேற்று பாடுவது வழக்கம் அப்படி இல்லை என்றால், இசைவெளியீட்டு விழாக்களில் பங்கேற்பது வழக்கம் இதை தவிர்த்து வேறு எங்கும் அதிகம் கலந்து கொள்ளாத அனிருத் தற்போது வில்லேஜ் டிக்கெட் எனும் சென்னையில் நடக்க இருக்கும் திருவிழாவை தொடங்கி வைத்து அதில் பங்கேற்று பேசினார் .

    Anirudh started the Village Ticket Festival

    வில்லேஜ் டிக்கெட் தனியார் நிறுவனம் நடத்தும் கலாச்சார திருவிழா. இந்த திருவிழா தமிழர் கலாச்சாரம் பற்றியும், அவர்களின் உணவுப்பழக்கம் பற்றியும் மற்றும் பல்வேறு விளையாட்டுகள் என்று முழுக்க முழுக்க தமிழர் கலாச்சார நிகழ்வுகளை ஒரே இடத்தில் நடத்தும் திருவிழா தான் வில்லேஜ் டிக்கெட் .

    இந்த விழாவின் துவக்க நாளான இன்று தமிழக அமைச்சர் ஒருவரும், சிறப்பு விருந்தினராக அனிருத்தும் கலந்து கொண்டனர். இந்த விழா நடக்கும் இடத்திற்கு அனிருத் குதிரை வண்டியில் அழைத்துவரப்பட்டு இருந்தார். குதிரை வண்டியில் சும்மா மாஸாக வந்த அனிருத்தை மேல தாளங்கள், தாரைத் தப்பட்டைகள் முழங்க விழாக்குழுவினர் வரவேற்றனர். அப்போது, அவர் இந்த திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    Anirudh started the Village Ticket Festival

    விழாவில் பேசிய அனிருத் , நான் சென்னையில் பிறந்து சென்னையில் வளர்ந்த பையன் இந்த விழா எனக்கு பிரம்மிப்பாகவும் புதுமையாகவும் இருக்கிறது. சிறு வயதில் பல இடங்களில் பார்த்த பல்வேறு விசயங்களையும் ஒரே இடத்தில் பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என தெரிவித்தார்.

    Anirudh started the Village Ticket Festival

    அனிரூத் வில்லேஜ் டிக்கெட் திருவிழாவில் கலந்து கொண்டது போல துவக்க விழாவில் நடிகை சுஹாசினியும் கலந்து கொண்டு பேசினார். மேலும், பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டு, தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டனர்.
    உழவு, உணவு உணர்வு ஆகிய வற்றை போற்றும் வகையில் சென்னையில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது வில்லேஜ் டிக்கெட் திருவிழா. இன்று தொடங்கி 9ம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில் தமிழக கிராமங்களில் பாரம்பரியமாக உள்ள பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளது.

    Anirudh started the Village Ticket Festival

    மாட்டு வண்டி பயணம், குதிரை வண்டி பயணம், ஜல்லிக்கட்டு காளைகளில் அணிவகுப்பு, உறியடி உள்பட ஏரானமான கிராமத்து வீர விளையாட்டுகளை விளையாடி மகிழலாம். பாரம்பரிய இசைக்கருவிகளை பார்க்கலாம். அதுமட்டுமல்லா சேலம் தட்டு வடையில் இருந்து பள்ளிப்பாளையம் சிக்கன் வரை விதவிதமான கிராமத்து உணவு வகைகளை ருசிக்கலாம். இவை எல்லா வற்றுக்கும் மேலாக ரூ.1550/ செலுத்தி, 28 வகைகள் அடங்கிய பிரமாண்ட அசைவ மொய் விருந்தை ஒரு வெட்டு வெட்டலாம். சைவப்பிரியர்களுக்கும் 28 வகையான ஐட்டங்கள் உண்டு. அதன் விலை ரூ.1000 மட்டுமே. இந்த கிராமத்து விருந்து வாழைஇலையில் பரிமாறப்படும் என்பது கூடுதல் தகவல்.

    Anirudh started the Village Ticket Festival

    வில்வித்தை, நேரடியாகப் பானை செய்தல் போன்ற 20க்கும் மேற்பட்ட கிராமத்து விளையாட்டுகளை விளையாடும் வாய்ப்பும் திருவிழாவில் பங்கேற்பவர்களுக்கு கிடைக்கும். அதுமட்டுமல்ல கரகாட்டம், சிலம்பாட்டம், மங்கள வாத்தியம் போன்ற பல்வேறு கிராமத்து கலை நிகழ்ச்சிகளும் மாலையில் உண்டு. தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை இந்த திருவிழா நடைபெறுகிறது. நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.200 மட்டுமே. சாப்பாட்டுக்கு தனித்தனியாக டோக்கன் வாங்கிக்கொள்ள வேண்டும்.

    English summary
    Anirudh started the Village Ticket Festival
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X