சொர்க்க வாசல் ஆர்.ஜே.பாலாஜியின் பெஸ்ட் படமா இருக்கும்.. அனிருத் பேச்சு!

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் சொர்க்க வாசல். இப்படத்தை அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கி உள்ளார். அப்படத்தில், ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நட்டி, சானியா அய்யப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அனிருத், இப்படம் ஆர்.ஜே.பாலாஜியின் பெஸ்ட் படமாக இருக்கும் என்றார்.

சிறையில் நடக்கும் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் நவம்பர் 29ம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், நேற்று டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய அனிருத், சொர்க்கவாசல் படத்தின் இயக்குநர் சித்தார்த் விஷ்வநாத், எங்களுடன் 12 வருடத்திற்கும் மேலாக வேலைபார்த்து வருகிறார். சித்தார்த் விஷ்வநாத் எங்க ஸ்கூல் ஜூனியர், அவருக்கு சினிமால ஆர்வம் இருக்குனு தெரியாது. நான் சினிமாவிற்கு வந்த போது திடீர்னு ஒருநாள் வந்து படம் டைரக்ட் பண்ணனும்னு சொன்னார். அதன்பிறகு அசிஸ்டன்ட் டைரக்டரா மூன்று படத்தில் வேலை பார்த்துவிட்டு, இப்போது இந்த படத்தின் இயக்குநராகி இருக்கிறார்.

sorgavasal rj balaji anirudh

பெருமையா இருக்கு: அவர் இந்தப் படத்தோட கதையை எடுத்துட்டு எங்கிட்ட வந்தார். படத்தோட கதையை சொன்னதும், இதுல யார் நடிச்சா நல்லா இருக்கும்னு கேட்டார். நான் என் நண்பர் ஆர்.ஜே பாலாஜி, இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பார். அவர் நடிச்சா நல்லா இருக்கும் என்று சொன்னேன். இந்த படத்தின் முதல் காப்பியை பார்த்துவிட்டேன். அதைப்பார்த்து நான் எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சி. நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு நல்ல படத்தை கொடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக படத்தின் ஹீரோ ஆர்ஜே பாலாஜி படத்தில் நன்றாக நடித்து இருக்கிறார்.

ஆர்ஜே பாலாஜியின் பெஸ்ட் படம்: நான் மியூசிக் ஆரம்பிக்கும்போது பாலாஜி எஃப்.எம் ரேடியோவில் கொடி கட்டிப் பறந்து கொண்டு இருந்தார். அங்கு இருந்துதான் எங்களின் நட்பு ஆரம்பித்தது. எது வேண்டுமானாலும் சொல்லலாம் என்கிற நண்பர்கள் பட்டியலில் இருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி தான். ரேடியோவில் இருந்து பயணத்தை ஆரம்பிச்சவர் இப்போ இவ்ளோ பெரிய ஹீரோவாக மாறியிருக்கிறார் என்றால், அது சாதாரண விஷயம் இல்லை. அவரோட கடின உழைப்பு தான் காரணம். அவரை காமெடி பண்ற ஒரு ஆளாதான் பார்த்திருக்கோம். ஆனா இந்தப் படத்தில் அவரோட டிரான்ஸ்பர்மேஷனை காட்டும் திரைப்படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஆர்ஜே பாலாஜிக்கும், இயக்குநருகும், படக் குழுவுக்கு என்னோட வாழ்த்துகள். இந்தப் படத்துக்கு செல்வராகவன் பெரிய பில்லராக இருந்து இருக்கிறார். என்னோட மியூசிக்கை நிறைய ஷேப் பண்ணதுல செல்வ அண்ணின் சப்போர்ட் இருந்தது அதற்கு உண்மையில் நான் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன் என்று அனிருத் அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X