காதலிக்கலாம், ஆனால் 2 பிரச்சனை உள்ளதே: அனிருத்
சென்னை: காதலி இல்லாவிட்டாலும் சந்தோஷமாக இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக காதலர் தினத்தன்று ஒரு பாடலை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அனிருத்.
இந்த ஆண்டு ஒன்னுமே ஆகல பாடலை சரியாக நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் காதல் குறித்து அவர் கூறுகையில்,

காதலி
நான் சிங்கிளாக மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். காதலி இல்லையே என்ற வருத்தம் இல்லை. என்னை காதலிப்பது கஷ்டம். என்னை கையாள்வது கஷ்டம்.

செல்போன்
என் பணி நேரம் வித்தியாசமானது. நான் செல்போனும், கையுமாக இருக்கும் ஆள் இல்லை. சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்துவிடுவேன். அவ்வளவு தான்.

ஆகாது
செல்போனில் குறுந்தகவல் அனுப்புவது எல்லாம் வேலைக்கு ஆகாது. இது தான் முதல் பிரச்சனை. நான் காதலை தற்போது எதிர்பார்க்கவில்லை. இது அடுத்த பிரச்சனை.

வேலை
என் வேலை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இசையில் புதியவற்றை தெரிந்து கொள்கிறேன். காதலில் விழ வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஆனால் நிச்சயம் ஒருவரை நான் காதலிப்பேன். கடந்த கால உறவுகளை பற்றி நினைப்பது இல்லை என அனிருத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











