ஆம்ஸ்டர்டாமில் அனிருத் பார்ட்டி.. சிவா, சிவன் ஆல் பிரசென்ட்!
அனிருத்தின் பிறந்தநாள் கடந்த அக்டோபர் 16ம் தேதி நிறைவடைந்தது. ஆனால், தனது நண்பர்களுக்கு தற்போது ஆம்ஸ்டர்டாமில் பார்ட்டி வைத்துள்ளார் அனிருத். இந்த பார்ட்டியில் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் உள்ளிட்
ஐரோப்பா: இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்த நாள் கடந்த அக்டோபர் 16ம் தேதி கொண்டாடப்பட்டது.
ஆனால், அந்த பிறந்த நாள் பார்ட்டியை அனிருத் இன்னும் தொடர்கிறார் என்பது இந்த இன்ஸ்டாகிராம் புகைப்படம் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் தனது நண்பர்களுக்கு அனிருத் பார்ட்டி கொடுத்துள்ளார். இதில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

30ஐ தொட்ட அனி
அக்டோபர் 16, 1990ம் ஆண்டு பிறந்த அனிருத், 29 வருடங்களை கடந்து தனது 30வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். தனுஷின் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளரான அனிருத், தனது முதல் பாடலான ஒய் திஸ் கொலவெறி பாடலிலே உலகளவில் பிரபலமானார். தமிழ் படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி அவ்வப்போது, வெளிநாடுகளிலும் இசை கச்சேரிகளை அனிருத் நடத்தி வருகிறார்.

தொடரும் கொண்டாட்டம்
அனிருத்தின் பிறந்த நாள் முடிந்து ஒருவாரத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், இன்னமும் அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு குட்டி கிராமத்தில் அனிருத்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

யார்.. யார்?
அனிருத்தின் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் விக்னேஷ் சிவன், கம்போஸர் விவேக் சிவா, ஒளிப்பதிவாளர் சதிஷ், கனா தர்ஷன், பாடகர்கள் இனோ கெங்கா, அர்ஜுன் சாண்டி, இயக்குநர் நெல்சன் என ஒரு பெரிய திரைப்பட்டாளமே கலந்து கொண்டிருக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தனுஷ் இல்லை
அனிருத்தின் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அனிருத்தை அறிமுகப்படுத்திய நடிகர் தனுஷ் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் கலந்து கொண்டு மேடையேறி ஒன்றாக பாட்டுப்பாடிய நிலையில், ஐரோப்பாவில் கொண்டாடப்பட்டு வரும் பிறந்த நாள் விழாவில் தனுஷ் பங்கேற்கவில்லை.


Click it and Unblock the Notifications











