தளபதியோட அந்த பாட்டுதான் ரொம்ப பிடிக்கும்... அதை ரீமிக்ஸ் செய்ய ஆசை... அனிருத் பளீச்

சென்னை : நேற்றைய தினம் தளபதி விஜய் தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார்.

Recommended Video

Thalapathy Vijay Unknown : Anirudhயை கலாய்க்கும் Thalapathy | #HBDTHALAPATHYVIJAY

இதையடுத்து வாழ்த்து மழையால் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தொடர்ந்து பரபரப்பாக காணப்பட்டன.

இந்நிலையில் விஜய் பிறந்தநாளையொட்டி இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விஜய் பிறந்தநாள்

விஜய் பிறந்தநாள்

தளபதி விஜய் தனது 47வது பிறந்ததினத்தை நேற்றைய தினம் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதையொட்டி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நேற்று காலை துவங்கி இரவு வரை வாழ்த்து மழையால் தொடர்ந்து பரபரப்புடன் காணப்பட்டன. சக நடிகர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரை வாழ்த்து மழையால் நனைய விட்டனர்.

தலைப்பு, பர்ஸ்ட் லுக் வெளியீடு

தலைப்பு, பர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் பிறந்தநாளையொட்டி அவர் தற்போது நடித்துவரும் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பு ஆகியவை வெளியிடப்பட்டன. படத்திற்கு பீஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 12 மணிக்கு இரண்டாவது லுக்கும் வெளியாகி ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியை கொடுத்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

பிடித்தமான விஜய் பட பாடல்

பிடித்தமான விஜய் பட பாடல்

துப்பாக்கி, மாஸ்டர் படங்களுக்கு பிறகு அவர் தளபதியுடன் 3வது முறையாக இந்த படத்தின்மூலம் இணைந்துள்ளார். இந்நிலையில் தளபதி நடித்த கில்லி படத்தின் அர்ஜூனனின் வில்லு பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தான் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் இந்த பாடலை கேட்க விரும்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ரீமிக்ஸ் செய்ய ஆசை

ரீமிக்ஸ் செய்ய ஆசை

மேலும் மாஸ்டர் படத்தில் கபடி பாடலை ரீமிக்ஸ் செய்ததை போல இந்த பாடலையும் தான் ரீமிக்ஸ் செய்ய விரும்புவதாகவும் அனிருத் தெரிவித்துள்ளார். தரணி இயக்கத்தில் வெளியான கில்லி படம் விஜய்யின் கேரியரை மாற்றிய படம். இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

பாராட்டி தங்க சங்கிலி அளித்த விஜய்

பாராட்டி தங்க சங்கிலி அளித்த விஜய்

மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாடலை கேட்ட தளபதி விஜய், தன்னை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து தங்க சங்கிலியை பரிசாக அளித்ததாகவும் அனிருத் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அனிருத் பீஸ்ட் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் விக்ரம் படத்தில் இணைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X