கிரிக்கெட்டில் செஞ்சுரி தெரியும், ஆனால் பேட்ட விஷயத்தில் செஞ்சுரி அடித்த அனிருத்
சென்னை: பேட்ட படத்தை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் 100-க்கும் மேற்பட்ட முறை பார்த்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பேட்ட படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் ரஜினியின் இந்த படத்தை எத்தனை முறை பார்த்துள்ளீர்கள் என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியது.
11 முறை
இதுவரை 11 முறை பார்த்துள்ளேன், இனியும் பார்ப்பேன் என்று ரஜினி ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஜினி
பேட்ட படத்தை இந்த ரசிகர் 4 முறை பார்த்துள்ளாராம்.
திருட்டுத்தனம்
எங்கள் நாட்டில் படம் முறையாக ரிலீஸாகாததால் திருட்டுக் காப்பியில் பார்த்தேன் என்று ஒருவர் பதில் அளித்துள்ளார்.
100
அனிருத் பேட்ட படத்தை இதுவரை 100க்கும் மேற்பட்ட முறை பார்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











