வந்துட்டாரு எங்க ஊரு ராக்ஸ்டாரு... அக்கட தேச மியூசிக் டைரக்டர்ஸ் காரு உஷாரு!

By Vignesh Selvaraj

ஐதராபாத் : இசையமைப்பாளர் அனிருத் தமிழில் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக இடம் பிடித்துவிட்டார். ஆறு வருடங்களில் 18 படங்களுக்கு மேல் இசையமைத்து தனக்கென ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி விட்டார்.

கடந்த சில வருடங்களாகவே அனிருத்தை தெலுங்கில் அறிமுகப்படுத்த சில முயற்சிகள் நடந்தன. ஆனால், கடைசியில் அவை நடைபெறாமலேயே போய்விட்டன.

இப்போது த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் 'அஞ்ஞாதவாசி' படத்தின் மூலம் டோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிவிட்டார் அனிருத்.

தெலுங்கில் அறிமுகம்

தெலுங்கில் அறிமுகம்

தெலுங்குத் திரையுலகின் ஸ்டார் ஹீரோவான பவன் கல்யாண் படத்தில் அறிமுகமாகிறார் அனிருத். த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் மற்றும் பலர் நடிக்கும் 'அஞ்ஞாதவாசி' படத்தின் மூலம் தெலுங்கில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் அனிருத்.

இசை வெளியீட்டு விழா

இசை வெளியீட்டு விழா

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் இன்று பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்களாம். அனிருத்தின் நேரடி இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

ராக்ஸ்டார் அனிருத்

ஏற்கெனவே 'அஞ்ஞாதவாசி' படத்தின் இரண்டு பாடல்களும், டீசரும் வெளிவந்து மிகப் பிரமாதமான வரவேற்பைப் பெற்றுள்ளன. அனிருத்திற்கு ஆந்திரா, தெலுங்கானாவிலும் தற்போது ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர்.

நேரடி ஒளிபரப்பு

நேரடி ஒளிபரப்பு

இன்று நடக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு அதிகமான அளவில் அனுமதியளிக்கவில்லை எனத் தெரிகிறது. அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக யூ-ட்யூப், ஃபேஸ்புக் ஆகிய தளங்களில் இசை நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளார்களாம்.

டோலிவுட் மியூசிக் டைரக்டர்ஸ் உஷார்

டோலிவுட் மியூசிக் டைரக்டர்ஸ் உஷார்

'அஞ்ஞாதவாசி' படம் யாருக்கு சிறந்த அடையாளத்தைக் கொடுக்கப் போகிறதோ இல்லையோ அனிருத்திற்கு ஒரு அட்டகாசமான அறிமுகத்தையும், அடையாளத்தையும் கொடுக்கப்போகிறது. தமன், தேவிஸ்ரீபிரசாத், அனுப் ரூபன்ஸ் உள்ளிட்ட தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர்களுக்கு இனி கடும் சவால் காத்திருக்கிறது.

சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்

சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்

'அஞ்ஞாதவாசி' இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பவன் கல்யாண் மற்றும் அனிருத் ரசிகர்கள் பல ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகின்றனர். நம்ம ஊர் ராக்ஸ்டார் அனிருத்துக்கு தெலுங்கு ரசிகர்கள் செம வரவேற்பு கொடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X