ரஜினி படத்திற்கு இசையமைப்பாளர் யார்..? வெளியானது அதிரடி அறிவிப்பு!

By Vignesh Selvaraj

Recommended Video

அனிருத் இசையில் தெறிக்க விடப்போகும் ரஜினியின் அடுத்த படம்- வீடியோ

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து வருகிறார். இயக்குனர் ரஞ்சித்துடன் இரண்டு படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டு அடுத்த ஆண்டு வெளியாகும் எனக் கூறப்டுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகி இருப்பதாக தயாரிப்பு குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனிருத் முதன்முறையாக ரஜினி படத்துக்கு இசையமைக்க இருக்கிறார்.

காலா

காலா

ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.ஓ' படத்தின் சில வேலைகள் இருப்பதால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

அனிருத் இசை

இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகி இருப்பதாக தயாரிப்பு குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலமாக சூப்பர்ஸ்டாருடன் முதன்முறையாக இணைந்திருக்கிறார் அனிருத். இதனால், அனிருத் ரசிகர்கள் செம ஹேப்பி.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

'காலா' டீசர் ரிலீஸ் நாளை தள்ளிப்போயிருக்கும் நிலையில், ரசிகர்களை கூல் செய்திருக்கிறது இந்த அறிவிப்பு. இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள், படக்குழு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X