அனிருத் என் படம்னா ரொம்ப அக்கறையா வேலை பார்ப்பார் !

சென்னை: இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்

Recommended Video

BEAST | Nelson, Anirudh, Pooja hegde at Vetri Theatre Chrompet | Tamil Filmibeat

பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகிறது

நெல்சன் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு படங்களுக்கும் அனிருத் இசையமைத்து வரும் நிலையில் தன்னுடைய படங்களுக்கு அனிருத் ரொம்ப அக்கறை எடுத்துக்கொள்வார் என நெல்சன் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

முதன்முறையாக திரைத்துறையில்

முதன்முறையாக திரைத்துறையில்

தமிழ் சினிமாவில் இப்பொழுது ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள நெல்சன் தன்னுடைய படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் கலகலப்பாகவும் இருப்பவர். நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் முதன்முறையாக திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானவர். கோலமாவு கோகிலா யோகி பாபுவுக்கு திருப்புமுனை படமாக அமைந்தது.

காமெடிக்கு பஞ்சமிருக்காது

காமெடிக்கு பஞ்சமிருக்காது

முழுக்க முழுக்க காமெடி கலந்த த்ரில்லர் கதை களத்தில் வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து நெல்சன் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தை இயக்கினார். பொதுவாக சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் என்றாலே கலகலப்பாகவும் காமெடிக்கு பஞ்சமிருக்காது. அதேபோல சிவகார்த்திகேயனும் காமெடியிலும் பட்டையை கிளப்புவார் ஆனால் டாக்டர் சிவகார்த்திகேயனின் வழக்கமான படங்களை போல இருக்கக் கூடாது என்பதற்காகவே சிவகார்த்திகேயனுக்கு மிகக் குறைந்த அளவிலேயே வசனங்கள் வைத்து இருப்பார்.

பீஸ்ட்

பீஸ்ட்

சிவகார்த்திகேயன்,பிரியங்கா அருள்மோகன்,யோகி பாபு,அர்ச்சனா, ரெடின் கிங்ஸ்லி என பலரது நடிப்பில் வெளியான இந்தப் படம் மிக தாமதமாகவே திரையரங்குகளில் வெளியாகி இருந்தாலும் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்தது. இவ்வாறு கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என இரண்டு சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் அடுத்ததாக இயக்கியுள்ள படம் பீஸ்ட் . மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய் யாருடன் இணைவார் என ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்க இப்பொழுது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வந்த பீஸ்ட் இன்று ரிலீஸாகியுள்ளது. ரசிகர்களின் கோலாகலத்துடன் இன்று பீஸ்ட் படம் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது

ரொம்பவே அக்கறையாக வேலை பார்ப்பார்

ரொம்பவே அக்கறையாக வேலை பார்ப்பார்

கோலமாவு கோகிலா,டாக்டர் மற்றும் தற்போது வெளியாகியுள்ள பீஸ்ட் என நெல்சன் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுக்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். நெல்சன் மற்றும் அனிருத் நீண்ட காலமாகவே நண்பனாக இருந்து வரும் நிலையில் இவர்களது நட்பு இப்பொழுது திரைத்துறையிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அனிருத் மற்ற படங்களை விடவும் என்னுடைய படங்களுக்கு ரொம்பவே அக்கறையாக வேலை பார்ப்பார் என நெல்சன் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X