ஃபுல் ஃபார்மில் அனிருத்.. அடுத்து அந்த ஹீரோவுடன் இணையப்போகிறாராம்.. வெளியான சூப்பர் தகவல்

சென்னை: அனிருத்தான் தற்போது கோலிவுட்டின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாகியிருக்கிறார் அவர். அவரது இசையமைப்பில் அடுத்ததாக வேட்டையன், தேவரா, விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படம் என வரிசையாக ரிலீஸாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அவர் இன்னொரு பெரிய ஹீரோவுடன் இணையவிருப்பதாக புதிய தகவல்கள் ஒன்று வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன.

கோலிவுட்டில் இப்போதைக்கு பிஸியான இசையமைப்பாளர் என்றால் அது அனிருத்தான். 3 படத்தின் மூலம் அறிமுகமாகி ஒய் திஸ் கொலை வெறி டி பாடல் மூலம் ஓவர் நைட்டில் ஒபாமா ஆன அவர் அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைத்து ஹிட்டடித்தார். இதன் காரணமாக அனிருத் இல்லாமல் சினிமாவில் அணுவும் அசையாது என்ற நிலை உருவாகியிருக்கிறது.

anirudh suriya kanguva

முன்னணி ஹீரோக்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் 90களில் எப்படி தமிழ் சினிமாவை ஆட்சி செய்தாரோ அதேபோல்தான் அனிருத்தும் இப்போது இருக்கிறார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு அனிருத்தே இசையமைக்கிறார். ஏன் இந்தியன்2வில்கூட அனிருத்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த்கூட, அனிருத் இந்தப் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டார் என்று கூறி ஆச்சரியப்படுத்தினார்.

ஹிந்தியில் அனிருத்: தமிழில் தனது சாம்ராஜ்ஜியத்தை வலுவாக்கி வைத்திருக்கும் அனிருத் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்துக்கு கலவையான விமர்சனங்கள் தமிழ்நாட்டில் கிடைத்தாலும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது.முக்கியமாக அனிருத்தின் இசை பெரிதளவில் கொண்டாடப்பட்டது. மேற்கொண்டு சில வாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்த படங்கள்: அனிருத்தை பொறுத்தவரை வரிசையாக படங்களுக்கு இசையமைத்துவருகிறார். அதன்படி ஜெயிலர், ஜவான், லியோ ஆகிய படங்கள்
கடந்த வருடத்தில் அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸாகின. மேலும் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கும அனிருத் தனது சம்பளத்தையும் பத்து கோடி ரூபாயாக உயர்த்திவிட்டார் என்ற தகவலும் கோடம்பாக்கத்தில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த படங்கள்: அனிருத்தின் இசையமைப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. ஆனால் அனிருத்தின் சுத்தமாக செட் ஆகவில்லை என்று பலர் வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவரது இசையமைப்பில் அடுத்ததாக அடுத்ததாக ரஜினியின் வேட்டையன், கூலி, விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படம், ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருக்கும் தேவரா என வரிசையாக வெளியாகவிருக்கின்றன. இதற்கிடையே வேட்டையன் படத்தில் இடம்பெற்றிருக்கும் மனசிலாயோ ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய படம்: இந்நிலையில் அனிருத்தின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்துவரும் சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்தப் படத்துக்கு அனிருத்தை இசையமைக்க வைக்க வேலைகள் நடந்துவருவதாகவும்; கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X