பாலிவுட்டுக்கு தாவும் அனிருத்... ஷாகித் கபூர் படத்திற்கு இசையமைப்பு

மும்பை : இசையமைப்பாளர் அனிருத் கோலிவுட், டோலிவுட்டில் சிறப்பாக இசையமைத்து வருகிறார்.

கடந்த 2019ல் வெளியான ஜெர்சி தெலுங்கு படத்தில் அனிருத் இசை பெரியளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் ரீமேக் இந்தியில் ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் தற்போது அனிருத் கமிட்டாகியுள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத்

இசையமைப்பாளர் அனிருத்

இசையமைப்பாளர் அனிருத், கோலிவுட், டோலிவுட் ஆகியவற்றில் தொடர்ந்து படங்களில் பணியாற்றி வருகிறார். இவர் இசையமைப்பில் வெளியாகும் அனைத்து பாடல்களும் அனைத்து தரப்பினரையும் குறிப்பாக இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அனிருத் இசையில் டாக்டர் படம்

அனிருத் இசையில் டாக்டர் படம்

நாளைய தினம் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் ரிலீசாக உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தென்னிந்தியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் என்ற பெருமையும் அனிருத்திற்கு உள்ளது.

ஜெர்சி படத்தின் இசை

ஜெர்சி படத்தின் இசை

கடந்த 2019ல் இவரது இசையில் வெளியான ஜெர்சி படம் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான இந்தப் படம் சிறப்பான வெற்றி பெற்றதுடன் அனிருத்தின் இசையும் வெகுவாக சிலாகிக்கப்பட்டது.

ஜெர்சி படத்தின் இந்தி ரீமேக்

ஜெர்சி படத்தின் இந்தி ரீமேக்

தற்போது இதன் இந்தி ரீமேக் ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகி வருகிறது. மிருணாள் தாகூர், பங்கஜ் கபூர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்தப் படம் உருவாகிவருகிறது. தெலுங்கில் படத்தை டைரக்ட் செய்த கவுதம் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.

பாலிவுட்டிற்கு தாவும் அனிருத்

பாலிவுட்டிற்கு தாவும் அனிருத்

படத்திற்கு முதாலில் சச்சட் மற்றும் பரம்பாரா ஆகியோர் இசையமைப்பதாக இருந்த நிலையில், தற்போது அனிருத்தே இசையமைக்க உள்ளார். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. முன்னதாக பிஜோய் நம்பியார் இயக்கத்தில் டேவிட் இந்தி படத்திற்கு ஒரு பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

முழுமையான இந்தி படம்

முழுமையான இந்தி படம்

இந்நிலையில் ஜெர்சி படத்தின் இந்தி ரீமேக் மூலமாக தற்போது அனிருத் முழுமையான இந்திப் படத்தில் அறிமுகமாகவுள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் தன்னை நிரூபித்து சிறந்த இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத் பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளது சிறப்பானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X