ரஜினியை அடுத்து கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்?
Recommended Video

சென்னை: ரஜினி படத்தை அடுத்து கமல் ஹாஸனின் இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போவதாக கூறப்படுகிறது.
கோலிவுட்டின் இளம் இசையமைப்பாளரான அனிருத் கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். அடுத்த ஆண்டு அவர் தனுஷுடன் மீண்டும் சேர்ந்து பணியாற்ற உள்ளார்.
அதற்கு முன்பு ரஜினியின் படத்திற்கு இசையமைக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ்
ரஜினிகாந்தை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்நிலையில் அவருக்கு கமல் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் நடிக்கவிருக்கும் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்க அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஏ.ஆர். ரஹ்மான்
இந்தியன் படத்தை போன்றே அதன் இரண்டாம் பாகத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

ஷூட்டிங்
இந்தியன் 2 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் துவங்க உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











