Anirudh: எனக்கு கல்யாணம்னு நீ பாத்த.. கிளம்பிய வதந்திகளுக்கு நச் ரிப்ளை கொடுத்த அனிருத்!
சென்னை: இசையமைப்பாளர் அனிருத் திருமணம் தொடர்பான தகவல்கள் கடந்த சில நாட்களாக இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே இவரது திருமணம் தொடர்பான தகவல்கள் உலா வந்து கொண்டு இருந்ததால் பலரும் இதை உண்மை என நம்புவும் செய்துவிட்டனர். இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் அனிருத் அதற்கு நச் ரிப்ளை கொடுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வந்த தகவல் என்னவென்றால் அது, இசையமைப்பாளர் அனிருத் திருமணம் தான். அதாவது இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோர் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் ரூமர்கள் கிளம்பியது. பயில்வான் ரங்கநாதன் போன்றோர் இந்த தகவல்கள் குறித்து பேட்டி எல்லாம் கொடுத்தார்கள். இதனால் பலரும் நம்பிவிட்டார்கள்.

அனிருத் போஸ்ட்: இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக தனது ஸ்டைலில் நச் ரிப்ளை கொடுத்துள்ளார். அதாவது, " Marriage ah? lol .. Chill out guys pls stop spreading rumours " என பதிவிட்டுள்ளார். அதாவது, " கல்யாணமா? கொஞ்சம் ஃப்ரீயா இருங்க, தயவு செய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு ரசிகர்களும் அப்போ அது உண்மை இல்லையா என நக்கலாக கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.
தென்னிந்தியா ஸ்டார்: தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் உச்ச நட்சத்திரங்களை பட்டியல் எடுத்தால் அதில் அனிருத் பெயர் கட்டாயம் இருக்கும். காரணம் பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் தயாராகவுள்ளது என்றால் அனிருத்தை படத்திற்குள் கொண்டு வராமல் யாரும் அந்த படத்திற்குள் களமிறங்குவதில்லை. தென்னிந்திய சினிமாவிலேயே உச்ச நட்சத்திரமாக விளங்கும் அனிருத் தனது சென்சேஷனல் இசையால் மொத்த தென்னிந்தியாவையும் ஆண்டு கொண்டு உள்ளார். இந்நிலையில் இவருக்கு திருமண்ம் என்று தகவல்கள் இணையத்தில் உலா வந்ததும் பலரும் நம்பிவிட்டார்கள். அதுவும் அனிருத்தும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகளும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறன் என இருவரும் காதலில் உள்ளார்கள் என்று வதந்திகள் பரப்பப்ட்டதால், பலரும் நம்பிவிட்டார்கள்.
திருமண வதந்தி: இது மட்டும் இல்லாமல், இணையத்துக்குள் நுழைந்தாலே இவர்களின் கல்யாணக் கதை தொடர்பான பேச்சு தான் அதிகம் உலா வந்ததால் இவர்கள் இருவரும் டாக் ஆஃப் த டவுனாக மாறிவிட்டார்கள். இந்நிலையில்தான் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வில்லை என்றால், வம்பாகி போகும் என அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் ரியாக்ட் செய்துள்ளார். அதாவது, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " " Marriage ah? lol .. Chill out guys pls stop spreading rumours " என பதிவிட்டுள்ளார். அதாவது, " கல்யாணமா? கொஞ்சம் ஃப்ரீயா இருங்க, தயவு செய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
லைன் அப்: அனிருத் தற்போது தமிழில் மட்டும் பல முக்கியமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி மற்றும் ஜெயிலர் 2, விஜய்யின் ஜன நாயகன், பிரதீப் ஆண்டனியின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் வேறு மொழிப் படங்களிலும் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











