வாவ் கொல மாஸா இருக்கே.. அனிருத், யுவன், சந்தோஷ் நாராயணன் குரலில் தெறிக்கப் போகுது மாஸ்டர் இசை!

சென்னை: தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா இன்று மாலை லீலா பேலஸில் நடைபெறுகிறது.

மாஸ்டர் இசை விழா சன் டிவியில் மாலை 6.30 மணி முதல் லைவ் டெலிகாஸ்ட் செய்யப்படுகிறது.

விஜே பாவனா மற்றும் மிர்ச்சி விஜய் இந்த இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்க உள்ளனர்.

டிரெண்டிங்கில் முதலிடம்

டிரெண்டிங்கில் முதலிடம்

நேற்று இரவு 8.30 மணிக்கு எதிர்பாராத விதமாக ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக வந்த வாத்தி ரெய்டு பாடல், இதுவரை 2.7 மில்லியன் வியூஸ் கடந்து வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் வீட்டில் தொடர்ந்து நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை பெரியளவில் பேசப்பட்ட நிலையில், மூன்றாவது சிங்கிள் பாடலே வாத்தி ரெய்டு என வருவதெல்லாம் வேற ரகம்.

இசை வெளியீடு

இசை வெளியீடு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், விஜே ரம்யா, செளந்தர்யா, சேத்தன், ஸ்ரீமன், ஸ்ரீநாத், பிரேம் குமார் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது.

ராக்ஸ்டார் அனிருத்

ராக்ஸ்டார் அனிருத்

மெர்சல், சர்கார், பிகில் என தொடர்ந்து விஜய் படங்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வந்தார். இந்நிலையில், கத்தி படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். பொதுவாகவே விஜய் படங்களில் பாடல்கள் ஹிட் அடிக்கும், அனிருத் வேற லெவல் எனர்ஜியுடன் மாஸ் நம்பர்களை கொடுத்துள்ளார்.

யுவன், அனி, சநா

யுவன், அனி, சநா

வாத்தி ரெய்டு பாடல் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அடுத்த அப்டேட்டாக மாஸ்டர் படத்தின் டிராக் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள மாஸ்டர் ஆல்பத்தில், இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆளுக்கொரு பாடலை பாடி அமர்களப்படுத்தியுள்ளனர்.

டிராக் லிஸ்ட்

டிராக் லிஸ்ட்

மாஸ்டர் படத்தின் ஓபனிங் பாடல் "வாத்தி கம்மிங்", விக்னேஷ் சிவன் வரிகளில் யுவன் பாடியுள்ள "அந்த கண்ண பார்த்தாக்கா" ரொமாண்டிக் நம்பர், குட்டி ஸ்டோரி உங்களுக்கே தெரியும், Quit பண்ணுடா அனிருத் குரலில், பீட் ஆப் மாஸ்டர் (தீம்), லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், சந்தோஷ் நாராயணன் குரலில் பொளக்கட்டும் பறை பறை என டிராக் லிஸ்டே பெரட்டி வுடுது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X