தர்பார் படத்துக்கு வெளிநாட்டு இசைக் கலைஞர்களை பயன்படுத்துவதா? அனிருத்துக்கு எதிராக நடவடிக்கை
சென்னை: தர்பார் படத்தின் பின்னணி இசை சேர்ப்புக்கு வெளிநாட்டு இசைக்கலைஞர்களை பயன்படுத்தியதால், இசையமைப்பாளர் அனிருத் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம், தர்பார். வரும் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணியில், இசை அமைப்பாளர்கள் சங்கத்தில் உள்ள உள்ளூர் இசை கலைஞர்களைப் பயன்படுத்தாமல் வெளிநாட்டு இசை கலைஞர்களை அவர் அதிகம் பயன்படுத்தினாராம்.

பாதி இசைக் கலைஞர்கள்
இதுபற்றி திரைப்பட இசை கலைஞர்கள் சங்க தலைவரும், இசையமைப்பாளருமான தினா அனிருத்திடம் தெரிவித்துள்ளார். அப்போது பாதிக்கு பாதி இசைக் கலைஞர்களை உள்ளூரில் இருந்து பயன்படுத்தும்படி கூறியுள்ளார்.

வெளிநாட்டு கலைஞர்கள்
ஆனால், அனிருத் அதை மீறி, பெயருக்கு சில கலைஞர்களை மட்டும் பயன்படுத்திவிட்டு, வெளிநாட்டு கலைஞர்களை அதிகம் பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இசை அமைப்பாளர் தினா
இதுபற்றி இசை அமைப்பாளர் தினா கூறும்போது, தர்பார் படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணி, வெளிநாட்டில் சமீபத்தில் தொடங்கியது. அதில் இங்குள்ள கலைஞர்கள் 5 பேர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு கொடுத்துவிட்டு, வெளிநாட்டு கலைஞர்கள் 50 பேரை பயன்படுத்தியுள்ளனர். இதுபற்றி அனிருத்திடம் கேட்டால், ஸாரி என்கிறார்.

இளையராஜா, ரகுமான்
இந்த சங்கத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற பெரிய இசையமைப்பாளர்கள் உள்பட 1,200 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அனிருத்தின் பொறுப்பற்ற பதில், சங்கத்தை அவமதிப்பதாக இருக்கிறது.

நடவடிக்கை
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்க செயற்குழு கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டது. அதன்படி, சங்க சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாத அனிருத் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.


Click it and Unblock the Notifications











