படம் வரும்போது வெறித்தனமா வரும்..மாஸ்டர் குறித்து பிரபல இசையமைப்பாளர் பேச்சு
சென்னை :மாஸ்டர் படம் வெளிவந்தால் சூப்பர் ஹிட்டாகும் இசையமைப்பாளர் அனிருத் வெளிப்படையாக பேசியுள்ளார் . பொதுவாக தமிழ் சினிமாவில் வருடா வருடம் பல திரைப்படங்கள் வெளியாகின்றன.ஆனால் எல்லா படங்களையும் அனைவரும் விரும்பி பார்ப்பதில்லை .
Recommended Video
மக்கள் அதிகமாக பிரபலமான ஹீரோக்களின் படத்திற்கே அதிகம் செல்வார்கள்.அதையும் மீறி வேறு சில படங்கள் அவர்களை கவர வேண்டுமெனில் அந்த படத்தின் ட்ரைலர் அனைவரையும் கவரும் வண்ணம் இருக்க வேண்டும்.
அதையும் தாண்டி அந்த படத்தின் பாடல்கள் அனைவரும் விரும்பும்படியாக இருக்க வேண்டும்.அந்த வகையில் அனிருத் அவர்கள் இளம் இசையமைப்பாளர்களில் கிங் 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்றுவரை பட்டையை கிளப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

பாடல்கள் ஹிட்
அதே போல் தளபதி விஜயின் திரை பயணத்தில் அவரின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் பாடல்கள் தான் இன்றும் இவரின் பாடல்கள் தொலைக்காட்சியில் வந்தால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை ரசிக்காத ஆட்கள் இல்லை.

அனிருத் வெயிட்டிங்
இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.பொதுவாக அனிருத் என்றாலே இளைஞர்களை அதிகம் கவரும் வண்ணம்தான் அவரின் இசை அமைந்திருக்கும்.இதற்கு முன் கத்தி திரைப்படத்தில் விஜய்க்கு இசையமைத்த அனிருத் தற்போது மாஸ்டர் படத்தில் இரண்டாம் முறையாக விஜய்க்கு இசையமைத்துள்ளார்.

பில்லியன் வியூஸ்
ஏற்கனவே கத்தி படத்தில் பின்னணி இசையில் பட்டையை கிளப்பிய அனிருத் மாஸ்டர் பட பாடல்களிலும் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.மாஸ்டர் பட பாடல்கள் வெளியானதை தொடர்ந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இதில் அனைத்து பாடல்களும் பலராலும் ரசிக்கப்பட்டு டிக்டாக்கில் பில்லியன் கணக்கில் வியூஸ் சென்று சாதனை படைத்துள்ளது.

மாஸ்டர் வைரல்
தற்போது லாக் டவுன் என்பதால் பிரபலங்கள் அனைவரும் தங்களின் வீட்டிலிருந்தபடியே பேட்டி தருகிறார்கள்.தற்போது ஒரு பேட்டியில் அனிருத் கூறுகையில் நல்ல வேலை மாஸ்டர் ஆடியோ லான்ச் சீக்கிரமாக வைத்தார்கள் இல்லையெனில் ஆல்பம் ரிலீஸ் ஆகியிருக்காது.நல்ல வேலையாக ரிலீஸ் ஆனதால் இந்த பாடல்கள் டிக் டாக் போன்ற தளங்களில் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட திட்டம் போட்டுதான் பட வேலைகள் ஆரம்பித்தோம் ஆனால் லாக் டவுன் போட்டதால் படத்தை வெளியிட முடியவில்லை.

மாஸ்டர் ஆரம்பம்
இந்த கொரோனா தொற்று போன்ற பிரச்னைகள் முடிந்தவுடன் கண்டிப்பாக மாஸாக ரிலீஸாகும்.நான் தளபதியிடமும் பேசினேன். அவரும் இதே போல் தான் சொன்னார்,ஆனால் படம் வரும்போது மாஸாக வரும் என்று அனிருத் கூறினார்.ஏற்கனவே ட்ரைலர் குறித்து அர்ஜுன் தாஸ் கூறியது ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டது.தற்போது அனிருத் அவர்களும் மாஸ்டர் குறித்து கூறிய தகவல்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











