“லவ் ஆல்வேஸ்”.. ஒரே வார்த்தையில் திருமணம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷாலின் காதலி!

விஷாலுடனான தனது திருமணம் நிற்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளார் நடிகை அனிஷா.

Recommended Video

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிய விஷால் மனைவி

சென்னை: விஷாலுடனான திருமணம் நின்று விட்டதாக வெளியான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது சமூகவலைதளப் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை அனிஷா.

நடிகர் விஷால், தெலுங்கு நடிகையும் பிரபல தொழிலதிபரின் மகளுமான அனிஷா அல்லா ரெட்டியை காதலித்து வருவதாக இந்தாண்டு தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருவீட்டார் சம்மதத்துடன் ஹைதராபாத்தில் அவர்களது நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது. வரும் அக்டோபரில் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நடிகர் சங்கக் கட்டிடத்தில் வைத்து தங்களது திருமணம் நடைபெறும் என விஷால் தெரிவித்திருந்தார். திருமணத்திற்கான நாள் நெருங்கி வரும் வேளையில், இருவீட்டாரும் திருமண வேலையில் ஈடுபடாமல் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.

திருமணம் நிறுத்தம்

திருமணம் நிறுத்தம்

இதனால் விஷால் - அனிஷா திருமணம் நிறுத்தப்பட்டு விட்டதாக ஒரு செய்தி தீயாய் பரவியது. அதனை உறுதி செய்வது போல், அனிஷாவும் தங்களது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கினார். எனவே, திருமணம் நின்றது உறுதியானதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

பல்வேறு யூகங்கள்

பல்வேறு யூகங்கள்

திருமணம் நிறுத்தப்பட்டது தொடர்பாக பல்வேறு யூகங்கள் வெளியானது. ஆனால், அவை எதற்குமே விஷாலும் சரி, அனிஷாவும் சரி பதிலளிக்கவில்லை. அவர்களது மௌனமே அவர்களுக்குள் பிரச்சினை இருப்பதை மேலும் உறுதி செய்வதாக நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கருத்து பதிவு செய்து வந்தனர்.

விஷால் பிறந்தநாள்

விஷால் பிறந்தநாள்

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அனிஷா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் விஷால் நேற்றுமுன்தினம் தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அனுஷா இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து

அதில், "இனிய பிறந்தநாள் ஸ்டார், நீங்கள் பிரகாசிக்க பிறந்தவர். உங்கள் அழகையும் உங்கள் இருப்பையும் என்றென்றும் நான் போற்றுவேன். மகத்துவம் உங்கள் வழியில் வருகிறது, நம்பிக்கையுடன் இருங்கள். லவ் ஆல்வேஸ்" என அனிஷா தெரிவித்திருந்தார்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி

வதந்திக்கு முற்றுப்புள்ளி

விஷாலுக்கு அனிஷா தெரிவித்துள்ள பிறந்த நாள் வாழ்த்தின் மூலம் இவர்கள் இணக்கமாக இருப்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது. எனவே, திட்டமிட்டபடி அவர்களது திருமணம் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் எனத் தெரிகிறது. இதனால் விஷாலின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விஷாலின் படங்கள்

விஷாலின் படங்கள்

இது ஒருபுறம் இருக்க, விஷால் தற்போது சுந்தர் சி-யின் ஆக்‌ஷன் எண்டெர்டெயின்மெண்ட் படமான ‘ஆக்‌ஷனில்' நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக தமன்னா நடிக்கிறார். அதோடு, 'துப்பறிவாளன் 2, இரும்புத்திரை 2' ஆகிய படங்களும் விஷாலின் கைவசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X