விஷாலுக்கு 'ரொமான்டிக்'காக காதலர் தின வாழ்த்து தெரிவித்த அனிஷா
சென்னை: ரொமான்டிக் புகைப்படத்துடன் காதலர் விஷாலுக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் அனிஷா ரெட்டி.
காதலர் தினத்தன்று அனிஷா ரெட்டி தனது வருங்கால கணவரும், காதலருமான விஷாலுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஷால் பேச்சுலராக கொண்டாடிய கடைசி காதலர் தினம் இது தான்.
அடுத்த ஆண்டு காதலர் தினத்தின்போது அவர் அனிஷாவின் கணவராக இருப்பார்.
அனிஷா
அனிஷா காதலர் தினத்தன்று விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து காதல் என்றால் என்ன என்று பெரிய விளக்கமே அளித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார். மேலும் தான் விஷாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

வாழ்த்து
அனிஷாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்தவர்கள் காதலுக்கு இப்படி ஒரு விளக்கமா, அருமை என்கிறார்கள். மேலும் வீட்டில் சொல்லி விஷாலுக்கும், அவருக்கும் சுத்திப் போடுமாறும் தெரிவித்துள்ளனர்.

விஷால்
அனிஷா தைரியமான பெண். விஷாலை திருமணம் செய்யப் போவது அறிந்து அவரை பலரும் கலாய்த்தபோது கூட அதை பார்த்து கடுப்பாகாமல் நச்சென்று பதிலடி கொடுத்தார் அவர்.

நடிகர் சங்கம்
நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முடிந்த பிறகே திருமணம் என்பதில் விஷால் உறுதியாக உள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் விஷால், அனிஷா திருமணம் நடக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











