Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனிஷா: அப்போ, திருமணம் நிற்கவில்லையா?
Recommended Video
சென்னை: விஷால் பிறந்தநாளை முன்னிட்டு அனிஷா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தெலுங்கு நடிகை அனிஷா இன்ஸ்டாகிராமில் விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்டார். ஜொலிப்பதற்காக பிறந்தவர் நீங்கள் என்று அனிஷா வாழ்த்திய விதத்தை பார்த்தால் திருமணம் நிற்கவில்லை என்று தான் தோன்றுகிறது. வாழ்த்து கூறியதுடன் தான் விஷாலுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் அனிஷா.
விஷாலுக்கும், அனிஷாவுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் அனிஷா இன்ஸ்டாகிராமில் இருந்த விஷால் படங்கள், நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கிவிட்டார். அதனால் அவர்களின் திருமணம் நின்றுவிட்டதாக பேச்சு கிளம்பியது.
சுடச்சுட... தண்ணீருக்குள் செம ஹாட்டா.. பிகினி போட்டோ ஷூட் நடத்திய 'புலி' ஹீரோயின்..!
நடிகர் சங்க கட்டிடத்தில் தான் திருமணத்தை நடத்த வேண்டும் என்று விஷாலும், ஹைதராபாத்தில் நடத்த வேண்டும் என்று பெண் வீட்டாரும் உறுதியாக இருப்பதால் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அனிஷா வாழ்த்தியதை பார்த்தால் திருமணம் நிற்கவில்லையோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
விஷால், அனிஷாவுக்கு அக்டோபர் மாதம் 9ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண பத்திரிகை இன்னும் அடிக்கப்படவில்லை. திருமண வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
விஷால் சுந்தர் சி. இயக்கத்தில் ஆக்ஷன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து அவர் துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்க உள்ளார். திருமணம் நடைபெறுமா, இல்லையா என்பது குறித்து விஷாலும், அனிஷாவும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
இருப்பினும் திருமணம் நின்றுவிட்டது என்று விஷாலின் நெருக்கமான நண்பர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.