twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பரத நாட்டியம் பரிதாப நாட்டியமாகிவிட்டது! - ஐஸ்வர்யா நடனம் குறித்து அனிதா ரத்னம்

    By Shankar
    |

    சென்னை: ஐநா சபையில் ஐஸ்வர்யா ஆடியது பரத நாட்டியம் அல்ல... பரிதாப நாட்டியம் என்று பிரபல பரதநாட்டியக் கலைஞர் அனிதா ரத்னம் விமர்சித்துள்ளார்.

    ரஜினி மகள் ஐஸ்வர்யா ஐநா சபையில் ஆடிய பரத நாட்டியம் பலத்த கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது. வைரமுத்துவின் அவசர தாலாட்டு உள்ளிட்ட சில பாடல்களுக்கு புதுமையான முறையில் அவர் நாட்டியமாடியிருந்தார்.

    Anita Rathnam blasted Aishwarya Rajini's Bharatha Nattiyam

    அதற்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

    ஆனால் இணைய வெளியில் அந்த நடனத்தை ஏகத்துக்கும் கிண்டலடித்தனர். இந்த நிலையில் பிரபல பரத நாட்டியக் கலைஞர் அனிதா ரத்னமும், ஐஸ்வர்யா நடனத்தை குறை சொல்லியுள்ளார்.

    ஐஸ்வர்யா ஆடியது பரத நாட்டியமல்ல... பரத நாட்டியம் இன்று எந்த அளவுக்கு பரிதாப நாட்டியமாகிவிட்டது என்பதை அந்த நடனம் காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

    ஐஸ்வர்யா பரத நாட்டியத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். ஏற்கெனவே சென்னையில் பல விழாக்களில் அவர் பரத நாட்டியம் ஆடியுள்ளார்.

    English summary
    Acclaimed dancer Anita Ratnam have blasted Aishwarya Rajini's performance at UNO, terming it as the pathetic state of Bharatanatyam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X