முகவரி கொடு, வெயிட்டான கவர் அனுப்புறேன்: விமர்சகருடன் மோதிய 90 எம்.எல். இயக்குநர்
Recommended Video

சென்னை: 90 எம்.எல். பட இயக்குநர் அனிதா உதீப் விமர்சகர் ஒருவரிடமும் ட்விட்டரில் மோதியுள்ளார்.
அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்த 90 எம்.எல். படம் மிக மட்டம் என்று பலரும் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் அனிதா தனது படத்தை விமர்சித்த தயாரிப்பாளர் தனஞ்செயனுடன் ட்விட்டரில் மோதினார்.
மேலும் விமர்சகர் ஒருவரிடமும் மோதியுள்ளார்.
90 எம்.எல்.
90 எம்.எல். படம் அனைத்து விதத்திலும் தவறு என்று விமர்சித்த பிரசாந்துடன் மோதியுள்ளார் அனிதா. என் படம் பற்றிய உங்களின் அப்பாடக்கர் விமர்சனத்தை கேட்க நிறைய எதிர்பார்ப்புடன் வந்தேன். ஆனால் என் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று அறிவுரை கிடைத்துள்ளது. குருஜி, திருமணத்திற்கு முன்பு நான் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா என்று சொல்ல முடியுமா? அது சரியா, தவறா? இதற்கு பதில் அளிப்பதற்கு முன்பு உங்களின் முகவரியை கொடுங்கள். வெயிட்டான கவரை அனுப்பி வைக்கிறேன் என்று அனிதா ட்வீட் செய்தார்.
விமர்சகர்கள்
நீங்கள் பணம் கொடுத்து சில விமர்சகர்களை அமைதியாக்கியது எனக்கு தெரியும் மேடம். ஆனால் அனைவரையும் வாங்க முடியாது. விநியோகஸ்தர் பெரும் தொகையை கொடுத்து உங்கள் படத்தை வாங்கியுள்ளார். இங்கு வீண் பேச்சு பேசுவதை விட்டுவிட்டு அவருக்கு நஷ்டஈடு கொடுங்கள் என்று பிரசாந்த் அனிதாவுக்கு பதில் அளித்துள்ளார்.
நிஜப் பெயர்
இதெல்லாம் பேசுறதுக்கு முன்னாடி டைட்டிலில் உங்களின் நிஜப் பெயரை போட தில் இருந்திருக்க வேண்டும். அந்த வெயிட்டான தொகையை என் டிப்ஸாக வைத்துக் கொள்ளுங்கள் என்று பிரசாந்த் ட்வீட்டியுள்ளார்.

விமர்சனம்
உங்களை ஏன் விட்டுவிட்டார் என்று என் பி.ஆர்.ஓ.விடம் கேட்க வேண்டும். உங்களின் விமர்சனம் ஒர்த் இல்லை என்று அவர் நினைத்திருப்பாரோ. பரத்வாஜ் ரங்கன், சுதீஷ் காமத், சுதீர் ஸ்ரீனிவாசன், தன்யா ராஜேந்திரன், சுப கீர்த்தனா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தயவு செய்து அவர்களை உங்கள் அளவுக்கு கொண்டு வந்துவிடாதீர்கள் என்று அனிதா பிரசாந்திடம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











