மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த அனிதா.. காலில் விழுகிறேன் என்று கெஞ்சிய ரியோ.. கடுப்பான ஹவுஸ்மெட்ஸ்!

சென்னை: அனிதா சம்பத் மீண்டும் சின்ன சின்ன விஷயத்தையெல்லாம் பெரிதாக்குவது ஹவுஸ்மெட்களை எரிச்சலாக்கியுள்ளது.

நேற்றைய எபிசோடிலேயே ரியோவுக்கும் அனிதாவுக்கும் இடையே முட்டிக்கொண்டது. அனிதா எதற்கெடுத்துலாம் ரொம்பவே கோபப்படுகிறார் என ஆரியிடம் பஞ்சாயத்து செய்தார் ரியோ.

இந்நிலையில் இன்றைய எபிசோடிலும் ரியோவுக்கும் அனிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பிடித்துக்கொண்ட அனிதா

பிடித்துக்கொண்ட அனிதா

பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் நான் பாட்டிக்குதான் லாயல் என்றார் அனிதா. அதற்கு நல்ல கேரக்டர் கொடுத்திருக்காங்க அதைவிட்டுட்டு மத்தவங்க கூட சண்டை போட்டுட்ருக்க என்று ரியோ விளையாட்டாக சொல்ல அதை அப்படியே பிடித்துக் கொண்டார் அனிதா.

விடாமல் பேசிய அனிதா

விடாமல் பேசிய அனிதா

நான் சண்டைபோடல நீங்கதான் என்கிட்ட சண்டைக்கு வர்றீங்க என்று மீண்டும் பேச தொடங்கினார் அனிதா. அய்யோ விடு என சொல்லி விட்டு படுத்துக்கொண்டார் ரியோ. ஆனால அதை விடாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

பேசவிடாமல் இருந்தால்

பேசவிடாமல் இருந்தால்

மீண்டும் அந்த பிரச்சனையை கையில் எடுத்தார் அனிதா. நான் என்ன என்று எக்ஸ்பிளைன் செய்ய வந்தேன், அதற்கு நீங்கள் விடும்மா என்று கூறினால் என்ன அர்த்தம். எனக்கு அது வித்தியாசமா இருந்துச்சு என்றார் அனிதா.

ரியோவுக்கு ஆதரவாய்

ரியோவுக்கு ஆதரவாய்

அதனைக் கேட்ட ரியோ, நான் சண்டை போடல நீங்கதான் சண்டை போட வர்றீங்க என்கிறாய். அதன்பிறகு நான் எப்படிகேட்பேன். சும்மா ஃபன்னுக்கு சொல்வதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள கூடாது என்றார். அப்போது சோமும் ரியோவுக்கு ஆதரவாய் பேசினார்.

காலில் விழுகிறேன்

காலில் விழுகிறேன்

நான் விளையாட்டாக சொன்னேன் தவறு என்றால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என கூறினார் ரியோ. அதற்கு காலில் விழ வேண்டாம், நீங்கள் சொன்னது விளையாட்டாக இல்லை என்றார் அனிதா.

கோபமான ரியோ

கோபமான ரியோ

மீண்டும் அனிதாவுக்கு பதில் சொன்ன ரியோ பேசாவிட்டால் பேசவில்லை என்கிறாய். பேசினால் இப்படி சண்டை போட்டால் என்ன செய்வது, உனக்கு ஃபன் பிடிக்கவில்லை என்றால் மற்றவர்கள் பேசக்கூடாது என்றில்லை என கோபமாக கூறினார்.

நிஷா கோபம்

நிஷா கோபம்

இதனைக் கேட்ட நிஷா, இவ்ளோ நாள் பேசி பழகியிருக்க, எது ஃபன் ரியாக்ஷன் என்று தெரியாதா? அவன் காலில் விழுகிறேன் என்கிறான் என ரியோவுக்கு பரிந்து பேசினார். அப்போது யாரும் என் காலில் விழ வேண்டாம் என்று ஆட்டிட்யூட் காட்டினார் அனிதா.

கால்ல விழுவீயா?

கால்ல விழுவீயா?

இதனால் நிஷா அப்செட் ஆகிவிட்டார். தொடர்ந்து பெட்ரூமில் ரியோவிடம் பேசிய நிஷா, நான் காலில் விழுவேன்னு சொல்வியா என கேட்க, அனிதா நல்லது சொன்னால் கூட தப்பாகதான் புரிந்து கொண்டு பேசுகிறார் என்றார்.

சந்தோஷமாக இருக்கிறது

சந்தோஷமாக இருக்கிறது

எல்லாரையும் விட்டுட்டு இங்க இருக்கோம். ஒருவருக்கொருவர் ஃபன்னாக பேசும்போது ஜாலியாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர் எல்லாவற்றையும் தவறாக எடுத்துக்கொண்டால் என்ன செய்வது என ஆரியிடம் பஞ்சாயத்து பண்ணினார். அதற்கு ஆரியும் எப்போ அனிதா எப்படி எடுத்துக்கொள்கிறது என்றே தெரியவில்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X