ஆரி யாருக்கு ஓட்டுப் போடணும்னு அனிதா ஏன் சொல்லணும்.. தீமூட்டி நல்லா குளிர் காயுறாரு பாலா!

சென்னை: ஒன்றிலிருந்து பதிமூன்று வரை வரிசையில் நிற்க சொல்லி பிக் பாஸ் கொளுத்திப் போட்ட வெடி இப்ப நல்லாவே வெடிக்க ஆரம்பித்துள்ளது.

சனம் ஷெட்டிக்கு ஏன் இரண்டாவது இடத்துக்கு ஓட்டுப் போட்டீங்க என அனிதா சம்பத்தும் பாலாவும் ஆரியை கார்னர் செய்யும் முதல் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சனம்க்கு செருப்பை காட்டி விட்டு, சட்டென தன்னைத் தானே அடித்துக் கொண்டு போன பாலாவும், இரண்டாவது இடம் தான் வேணுமென ஒட்டாரம் பிடித்த அனிதாவும் இப்படி நியாயம் பேசுவது சரியில்லை என்றே தெரிகிறது.

ஆரியிடம் வாக்குவாதம்

ஆரியிடம் வாக்குவாதம்

சனம் ஷெட்டிக்கு ஆரி ஓட்டுப் போட்டு ஃபேவரிஸம் காட்டினார் என அனிதா சம்பத்தும், பாலாஜி முருகதாஸும் ஆரியை கார்னர் பண்ணி பேசும் முதல் புரமோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆரி இருவரது கேள்விக்கும் தனது சரியான வாதத்தை முன் வைத்து பேசுவதும் இந்த புரமோவில் இடம்பெற்றுள்ளது.

என்ன தப்பு பண்ணாங்க

என்ன தப்பு பண்ணாங்க

சனம்க்கு ஒரு கால் வந்ததுக்காக இரண்டு கால் வந்தவங்க என்ன தப்பு பண்ணாங்க என ஆரியின் நியாய தர்மத்தை கேள்வி கேட்டு அவரை நாக்கவுட் பண்ண வேண்டும் என்கிற முடிவிலே பாலாஜி தந்திரமாக இந்த கேள்வியை ஆரம்பித்துள்ளது புரமோ மூலம் வெளிச்சமாகி உள்ளது.

நீங்க ஓட்டுப் போட்டது தப்பு

நீங்க ஓட்டுப் போட்டது தப்பு

சனம் ஷெட்டி முதல் இடத்தை பிடித்துக் கொண்டு, எனக்கு கால் பண்ண யாருமே முன் வரலை, முதல் காலும் நான் நல்லா தான் பேசினேன், ரெண்டாவது கால் வந்திருந்தாலும் நல்லாவே பேசியிருப்பேன் என சனம் ஷெட்டி தனது வாதத்தை எடுத்து வைத்த நிலையில், ஆரி அவருக்காக ஓட்டுப் போட்டு இரண்டாவது இடத்தில் நிற்க வைத்தது தப்பு என அனிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

அது என் இஷ்டம்

அது என் இஷ்டம்

நான் யாருக்கு ஓட்டுப் போடணும்னு நீங்க தீர்மானிக்க வேண்டாம் அனிதா, அவங்க டிசர்விங் தான் அந்த இடத்துக்கு, எல்லாரும் ஓட்டுப் போடுற மாதிரி தான் நானும் சனம்க்கு ஓட்டுப் போட்டேன். ஓட்டுப் போடக் கூடாது என சொல்வது அது உங்க கருத்து ஆரி நச் பதிலடி கொடுத்தார்.

நியாயத்தை பேசாம விட்டீங்க

நியாயத்தை பேசாம விட்டீங்க

சனம் ஷெட்டி சைடுல இருக்க நியாயத்தை பேசிட்டு, இவங்க சைடுல இருக்க நியாயத்தை பேசாம விட்டீங்க என பாலாவும் ஆரியை கேள்வி மேல் கேட்பதாக முதல் புரமோ முடிகிறது. கமல் சார் சொன்னதுக்கு அப்புறம் ஆரி அர்ஜுனா ரொம்பவே பொறுமை காத்து வருகிறார். ஆரி நியாயமானவரே அல்ல என்று சொல்லிய பாலா, இப்போ ஏன் அவரிடம் போய் நியாயத்தை கேட்கிறார் என்பது தான் இதில் வேடிக்கையான விஷயம்.

ஆரி மட்டுமா ஓட்டுப் போட்டாரு?

ஆரி மட்டுமா ஓட்டுப் போட்டாரு?

மேலும், சனம் ஷெட்டிக்கு இரண்டாவது இடத்தில் நிற்க யாரெல்லாம் ஓட்டுப் போடுறீங்க என ஆரி கேட்ட போது, 5 பேர் ஓட்டுப் போட்டு மெஜாரிட்டி காட்டிய பிறகு தான் சனம் ஷெட்டியை இரண்டாவது இடத்தில் நிற்க வைத்தார்கள். மற்றவர்களை எல்லாம் விட்டு விட்டு ஆரியை மட்டுமே டார்கெட் செய்வது என்ன மாதிரியான கேம் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X