ஏன் பதில் சொல்ல தைரியம் இல்லையா? அந்த பாயிண்ட்டே தெரியலையா.. ரியோவை கதறவிட்ட அனிதா!
சென்னை: நாமினேஷன் புராசஸின் போது தன்னைப்பற்றி பேசிய ரியோவை வச்சு செய்தார் அனிதா.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. அப்போது ஹவுஸ்மேட்ஸ்களை நாமினேட் செய்தார் ரியோ.
அப்போது இடையில் அனிதா குறித்து பேசிய ரியோ கமலிடம் அவர் பேசியது குறித்து விளக்கமளித்தார்.

மத்தவங்க பண்ணிருப்பாங்க
அதாவது, தனி ஆளா நின்னு சமைச்சேன்னு ரொம்ப ஆக்ரோஷமாக வெளிப்படுத்துனாங்க. அவங்க கேட்ருந்தாங்கன்னா கண்டிப்பா மத்தவங்க வேலை பண்ணிருப்பாங்க. இதை நான் பதிவு பண்ணணும்னு நினைச்சேன்.

என்ன பிரச்சனை?
ஆனா இந்த காரணங்களுக்காக நான் அனிதாவ நாமினேட் பண்ணல என்றார். இதை கவனித்த அனிதா, நாமினேஷன் புராசஸ் முடிந்ததும் உங்களுக்கு என்ன பிரச்சனை என்கிட்ட பேசுங்க என்றார். அதற்கு உங்கக்கிட்டதான் பேசுகிறேன் என்றார் ரியோ.

பதில் சொல்ல மாட்டாங்கன்னு
அதற்கு அங்க நின்னு பேசினா பதில் சொல்ல மாட்டாங்கன்னு நினைச்சு பேசாதீங்க என்றார் அனிதா. அதை நான் உன்கிட்டதான் கத்துக்கிட்டேன் என்றப்படியே நகர்ந்தார் ரியோ. அப்போதும் விடாத அனிதா, ஏன் தைரியம் இல்லாத போறீங்க என்றார்.

இங்கே வச்சுக்காதீங்க
இதனால் கடுப்பான ரியோ வாட் டூ யூ மீன் என்று கேட்டுவிட்டு தைரியம் இல்ல என்ற வார்த்தையெல்லாம் இங்க வச்சுக்காதீங்க என்றார். அதற்கு நீங்க தைரியம் இல்லாமதான் நடந்து போறீங்க என்றார் அனிதா. நான் இங்கதான் இருக்கேன் நான் என்ன கதவை தாண்டி வெளியேவா போயிட்டேன் என்றார் ரியோ.

ஏன் கத்துறீங்க?
இதனை பார்த்த அனிதா, ஏன் கத்துறீங்க என்று கேட்டு வெறுப்பேற்றினார். அப்போது நான் இங்கதான் இருக்கேன். தைரியம் இல்லாம பேசுறேன்னு சொல்றீங்க பார்த்து பேசுங்க. என்று கூறினார். தொடர்ந்து ரோபோவா இருக்கும் சமைத்ததாக கூறினார் ரியோ.

அந்த பாயிண்ட்டே தெரியலையா?
ஆனால் மனிதர்களாக இருக்கும்போதுதான் தனி ஆளா சமைத்தேன். அந்த பாயிண்ட்டே தெரியலையா? என திரும்பி திரும்பி கேட்டார். தனி ஆளா சமையல் செஞ்சேன் காமிச்சுக்கிட்ட. அதான் நான் 12 பேருக்கு சமைச்சேன்ங்றதுதான் உங்களுக்கு காண்டு. எக்ஸ்ட்ரா பாயிண்ட் நைசா சேர்க்காதீங்க என்றார் அனிதா.

கடைசியில் சமாதானம்
இதனால் கடுப்பான ரியோ என்னை எப்படி காட்டணும்ன்னு ட்ரை பண்றீங்க என்று கேட்டு கடுப்பானார். இருப்பினும் கடைசியில் வெயில் அமர்ந்து பேசி சமாதானமாகிவிட்டார்கள். தன்னுடன் மோதியதால் சனம் வெளியே போனதாக அனிதா கூறியதை கேட்ட ரியோ, அனிதாவுடன் மோதியதால்தான் சுரேஷ், சம்யுக்தா, நிஷா ஆகியோர் வெளியேறியதாக கூறினார்.


Click it and Unblock the Notifications











