சுரேஷ்கிட்ட கோபப்பட்டது சரிதான்.. அடங்காத அனிதா.. தப்பேயில்லை என ஒத்து ஊதிய சனம்.. முடியலடா சாமி!
சென்னை: சுரேஷ் சக்கரவர்த்தியிடம் தான் சண்டை போட்டது சரிதான் என பேசி மீண்டும் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்த கமல், அர்ச்சனா கொடுத்த பட்டம் குறித்த விவாதித்தார்.
அனிதா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு கொடுக்கப்பட்ட ட்ரெண்டிங் அவார்டு குறித்து பேசினார் கமல்.

அந்த கருமத்த பாத்தீயா?
அப்போது, ட்ரெண்டிங் என்பது ரெண்டு விதமான ட்ரெண்டிங் உள்ளது. நல்ல விதமாகவும் இருக்கலாம் நெகட்டிவாகவும் இருக்கலாம் என்றார். அந்த கருமத்த பாத்தியா நீ? அதை பாத்தியா நீ என பல மாடுலேஷனில் பேசி எடுத்துக்காட்டு கொடுத்தார் கமல்.

அடுத்தடுத்த சண்டை
அனிதாவிடம் பேசிய கமல் நீங்கள் கொஞ்சம் குழம்பினீர்களே என்று கேட்டார். அதற்கு பதில் கூறிய அனிதா ஆமாம் சார் அடுத்தடுத்த நாள் சண்டை வந்ததால் என்ன நடந்திருக்குமோ என்ற குழப்பம் இருந்தது. அர்ச்சனா அக்காவிடமும் கேட்டேன் என்றார்.

வாண்ட்டடாக கேட்டேன்
பின்னர் இந்த விவகாரம் குறித்தும் கமல் பேசியதும் சனம் ஷெட்டியும் அனிதா சம்பத்தும் வெளியே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அர்ச்சனா அக்காவிடம் நான் வாண்ட்டடாகதான் கேட்டேன். சுரேஷ் சாரிடம் நான் பேசியது சரிதான்.

நான் பேசியது சரிதான்
அவர் பேசியதற்கு நான் கொடுத்தது சரியான பதில் தான். நான் தவறாக பேசவில்லை. சத்தமாக பேசியிருப்பேன். நான் தவறு செய்திருந்தால் ரியோவுக்கு சொன்னது போல் கமல் சார் அன்றே சொல்லியிருப்பார். ஆனால் அப்படி சொல்லவில்லை. அதனால் நான் செய்ததில் தவறு இல்லை என்றார் அனிதா.

ஒத்து ஊதிய சனம்
அதற்கு ஒத்து ஊதிய சனம் ஷெட்டி, ஆமாம் அதில் தப்பே இல்லை நீங்கள் கத்தியது சரிதான் என ஏற்றிவிட்டார். தொடர்ந்து பேசிய அனிதா, முதல் நாள் நான் கத்தும் போது வயசானவருக்கிட்ட ரூடா பேசுறதா நினைச்சிருப்பாங்க. அவரு வயசானவருங்றதால சிம்பத்தி வந்திருக்கும்.

கார்னர் செய்தது போல்
ஆனா ரியோ கத்தும் போது ரியோவுக்குதான் சப்போர்ட் பண்ணாங்க என அர்ச்சனா அக்கா சொன்னார் என்றார் அனிதா.
அதற்கு சனம், ஆனால் இப்போது கமல் ரியோ செய்தது தப்பு என்கிறாரே, அப்படியானால் அவரை கார்னர் செய்ததாகிவிடாதா? அந்த லிஸ்ட்டில் நானும் இருக்கிறேன் என்றார் சனம்.

அனிதா சப்பைக்கட்டு
அதற்கு பதில் அளித்த அனிதா சம்பத், ரியோ செய்தது தவறு என்று கமல் சார் சொல்லவில்லை, கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாம் என்றுதான் சொன்னார் என ரியோ செய்தது தவறே இல்லை என சுரேஷை கெட்டவராக காட்ட ரியோவுக்கு சப்பைக் கட்டு கட்டினார்.
Recommended Video

புரியாத வாத்துகள்
இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் இருவரையும் வாய்க்கு வந்தப்படி கழுவி ஊற்றி வருகின்றனர். கமல் என்ன சொல்கிறார் என்று கூட புரியாதா வாத்துகள் அனிதா சம்பத்தும் சனம் ஷெட்டியும் என்று விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











