சந்தேகப்பட்டுட்டல்ல.. சோமிடம் வேலையை காட்டிய அனிதா.. மொத்த பேரும் கடுப்புலதான் இருக்காங்க போல!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் சோமிடம் வேலையை காட்டிய அனிதா சோகத்தில் மூழ்கியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் ஹவுஸ்மெட்டுகளிடம் பேசிய கமல், உங்களை யாரெல்லாம் நாமினேட் செய்திருப்பார்கள் என்று கேட்டார்.
அதற்கு ஒவ்வொரு ஹவுஸ்மெட்ஸும் என்னை இவர் நாமினேட் செய்திருப்பார், அவர் நாமினேட் செய்திருப்பார் என கூறினர்.

அனிதா பண்ணியிருக்கலாம்
அந்த வகையில் சோம சேகரும் தன்னை யார் நாமினேட் செய்திருப்பார்கள் என்று கூறினார். அப்போது போன வாரமெல்லாம் அனிதாவுடன் நான் பேசவில்லை ஆகையால், அனிதா என்னை நாமினேட் செய்திருக்கலாம் என்று கூறினார்.

சோகமா படுத்திருக்கிற?
அப்போதே நான் பண்ணல, என்ற அனிதாவின் முகம் மாறிவிட்டது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் சோகமாய் படுத்திருந்தார் அனிதா. அப்போது அவரிடம் சென்ற சோம், ஏன் சோகமா படுத்திருக்கிற என்று சமாதானப்படுத்துகிறார்.

சந்தேக்கபட்டுட்டுல்ல
அப்போது அவரிடம் முகம் கொடுத்து பேசாத அனிதா, என்னையே சந்தேக்கபட்டுட்டுல்ல என்று கேட்கிறார். தாத்தா வெளியே போன போது நீ சேவ்வானதால் அவ்ளோ சந்தோஷப்பட்டேன். நானே உன்னை வெளியே அனுப்புவேனா.

ஹர்ட்டாயிடுச்சு
ரெண்டு வாரமா நீ என்கிட்ட பேசுறதில்ல.. அதை அங்க கொண்டுவந்துட்டல்ல.. என்று கோபித்துக் கொண்டார். சோம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் விடாபிடியாக பேசினார் அனிதா. மேலும் நீயும் ரியோவும் வெட்கமா இல்லயா என்று கேட்டது எனக்கு ஹர்ட்டாயிடுச்சு என்றார்.

சீரியஸாக இருந்தது
அதை அப்போவே சொல்ல வேண்டியதுதானே.. இப்போ சொல்ற, அது விளையாட்டாய் பேசியது என்று சோம் சொல்ல, நீங்கள் பேசியது சீரியஸாக இருந்தது என்றார் அனிதா. மேலும் நான் ரியோக்கிட்ட பேச வேண்டும் அவரை வர சொல் என்றும் சோமிடம் கூறினார்.

எப்போ நல்லாருக்கு
ஆனால் ரியோ, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா, நிஷா என எல்லோருமே அனிதா மீது அதிருப்தியில் உள்ளனர். அனிதா எப்போது நல்லாருக்கு எப்போவமா இருக்கு என்றே தெரியவில்லை என ரமேஷும் தன் பங்குக்கு அவர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

காலையிலேயே சோகம்
மறுநாள் காலையிலும் இந்த பிரச்சனை தொடர்ந்து. தூங்கி எழுந்து சோகமாக இருந்த அனிதாவை சனம் மற்றும் சுச்சி ஆகியோர் சமாதானம் செய்ய, இன்னும் பிரச்சனை தீரவில்லை என்றார். என்ன பிரச்சனை என அவர்கள் கேட்க, நான் ரியோக்கிட்ட பேசணும்னு சொன்னேன் ஆனா அவர் வரவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











