For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பேசத் தயங்கிய அனிதா.. கமல் முன்பு மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய அர்ச்சனா.. மத்தவங்க என்ன சொன்னாங்க!

  |

  சென்னை: ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பிரம்மாண்ட கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியது.

  முதலில் மக்கள் தீர்ப்பு டைட்டில் வின்னர் யார் என்கிற கார்டு கமல் கைகளுக்கு கொடுக்கப்பட்டது.

  பின்னர், எவிக்ட் ஆன இந்த சீசன் போட்டியாளர்களை அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அவர்களை கிராண்ட் ஃபினாலேவுக்கு வரவேற்றார்.

  நெக்ஸ்ட் சிஎம்.. நெக்ஸ்ட் கர்ணன்.. ரம்யாவே பரவாயில்லை போல.. அவங்க அக்கா வேற லெவல்.. முத்திப்போச்சு !நெக்ஸ்ட் சிஎம்.. நெக்ஸ்ட் கர்ணன்.. ரம்யாவே பரவாயில்லை போல.. அவங்க அக்கா வேற லெவல்.. முத்திப்போச்சு !

  பேசத் தயங்கிய அனிதா

  பேசத் தயங்கிய அனிதா

  சுரேஷ் தாத்தா, கேபி, ஷிவானி, சனம் எல்லாம் பேசிய பின்னர், அனிதா தன்னிடம் வந்த மைக்கை அடுத்து இருந்த நிஷாவிடம் கொடுத்தார். உங்க கிட்ட தான் பேசணும்னு சொன்ன கமல், அனிதாவின் அப்பா மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். உடனே அழத் தொடங்கிய அனிதா மைக் வாங்கி பேசினார்.

  அப்பா பெருமைப்பட்டார்

  அப்பா பெருமைப்பட்டார்

  நான் பிக் பாஸ் ஷோவில் விளையாடியதை பார்த்து எங்கப்பா ரொம்பவே பெருமைப்பட்டார் என அம்மா சொன்னாங்க சார்.. வெளியே வந்து குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரீ என்ட்ரிக்கு கூட வரவேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால், அம்மா தான், அது தான் உங்க அப்பாவோட சந்தோஷம். நீ உள்ள இருக்கும் போது, ஒவ்வொருத்தருக்கா போன் போட்டும், நேரில் பார்த்தும் ஷோவை பார்க்க சொன்னார் என்று சொல்லி உணர்ச்சி வசப்பட்டார் அனிதா.

  வீட்டுல வேண்டிக்கிட்டாங்க

  வீட்டுல வேண்டிக்கிட்டாங்க

  அனிதாவை தொடர்ந்து பேசிய அறந்தாங்கி நிஷா, ரொம்பவே ஹேப்பி சார்.. இப்போ எனக்கு ஏகப்பட்ட புதுக் குடும்பங்கள் தமிழ்நாடு முழுவதும் கிடைத்துள்ளன. நான் வெளியே வரணும்னு வீட்டுல எங்கம்மாவே வேண்டி இருப்பாங்க போல, அப்படித்தான் பேசிக்கிட்டாங்கன்னு நகைச்சுவையாக பேசி அரங்கை சிரிப்பொலியில் ஆழ்த்தினார்.

  மாறவே மாட்டார் போல

  மாறவே மாட்டார் போல

  அடுத்ததாக பேசிய அர்ச்சனா, இப்போதும் மனதில் கோபத்தை வைத்துக் கொண்டே பேசினார். வெளியே பாசிட்டிவ்வும், நெகட்டிவ்வும் சரிசமமாக கிடைத்தது. ட்ரோல் பண்ணவங்க, மீம் போட்டவங்களுக்கு ரொம்பவே நன்றி, உங்களால தான் ஓவர் நைட்டில் நான் ஃபேமஸ் ஆனேன் என கமல் முன்னாடியே ரொம்ப ஆட்டிட்யூட் காட்டி பேசினார்.

  வெயிட் போட்டுட்டேன்

  வெயிட் போட்டுட்டேன்

  அடுத்ததாக பேசிய சுசித்ரா, வெளியே போய் பார்த்தா, ரொம்பவே நல்லா இல்லை. நிறைய பேர் ரொம்பவே அக்கறையோடு கேட்டாங்க, அதனால், இந்த ஒரு மாசத்துல கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன் சார் என சிரித்துக் கொண்டே சுசித்ராவும் பேசி ரசிகர்கள் பாராட்டுக்களை அள்ளியுள்ளார்.

  வேல்முருகனுக்கு வந்த யோகம்

  வேல்முருகனுக்கு வந்த யோகம்

  பிக் பாஸ் வீட்டில் பாட்டுப் பாடி அனைவரையும் சந்தோஷப்படுத்தினேன். சட்டென வெளியேறியது கொஞ்சம் சங்கடமா இருந்தது வெளியே போனதும் உங்களுக்கு ஒன்று காத்துக் கொண்டிருக்கிறதுன்னு எப்படித்தான் நீங்க சொன்னீங்கனே தெரியல, இயல், இசை, நாடகத் துறையில் பொருளாளர் பதவி கிடைத்ததாக கூறி சந்தோஷப்பட்டார்.

  மீண்டும் ரசிக்கிறாங்க

  மீண்டும் ரசிக்கிறாங்க

  நாயகியாக இருந்த போது கிடைத்த புகழை போலவே தற்போது பிக் பாஸ் ரேகாவாக மாறிவிட்டேன். மீண்டும் என்னை ரசிகர்கள் ரசிக்கிறாங்க.. என்னோட குழந்தை மனசு ரசிகர்களுக்கு தெரிந்துள்ளது. மீனுக்குட்டின்னு கூப்பிடுறாங்க என க்யூட்டாக பேசி முடித்தார் ரேகா. அனைவரும் வெற்றிப் படத்தின் நாயகர்கள் தான் கமல் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

  English summary
  Anitha, Archana, Velmurugan, Nisha and Rekha talks in Bigg Boss Grand Finale. Kamal Haasan wishes every contestants future.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X