முகமூடி போட்ருக்கீங்க.. பாதி முகத்ததான் காட்றீங்க.. ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. ஆட்டம் ஆரம்பம்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

Recommended Video

Captaincy task-ல் உண்மையில் யார் Winner தெரியுமா? BALA vs Jithan RAMESH

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் மீண்டும் கால் செண்டர் டாஸ்க் தொடங்கியுள்ளது.

நேற்று அர்ச்சனா, சோம் மற்றும் ஆரி ஆகியோர் வாடிக்கையாளர்களின் கால்களை எதிர் கொண்டனர்.

உள்குத்து இல்லை

உள்குத்து இல்லை

இதில் அர்ச்சனா மற்றும் ஆஜித்தின் போன் கால் உரையாடல் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது. சோம் மற்றும் கேபியின் போன் கால் விளையாட்டாகவே, உள்குத்து எதுவுமின்றி ஜாலியாக இருந்தது.

மட்டமான பிளான்

மட்டமான பிளான்

ஆனால் பாலாஜி மற்றும் ஆரியின் போன் கால் உரையாடல்தான் வேற லெவலில் இருந்தது. ஆரியை அசிங்கப்படுத்த வேண்டும் பாலாஜியின் மட்டமான பிளான் வெளிப்பட்டது. பாலாஜியின் கேமை பற்றி ஹவுஸ்மேட்டும் ரசிகர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

அனிதா - ரியோ

அனிதா - ரியோ

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் கால் செண்டர் டாஸ்க் தொடருகிறது. இதில் வாடிக்கையாளராக உள்ள அனிதா, ரியோவுக்கு கால் செய்கிறார். தன் மனதில் உள்ள கேள்விகளை எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் கேட்டு ரியோவை கடுப்பாக்கிவிட்டார்.

ஆமாம் அப்படிதான் விளையாடுகிறேன்

ஆமாம் அப்படிதான் விளையாடுகிறேன்

போனில் பேசும் அனிதா, இன்டிவிட்ஜூவல் பிளேயரா விளையாடுறீங்களா என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் ரியோ, ஆமாம் இன்டிவிட்ஜூவல் பிளேயரா மட்டுமேதான் விளையாடுகிறேன் என்கிறார் ரியோ.

முகமூடி போட்டு வந்துருக்கீங்க

முகமூடி போட்டு வந்துருக்கீங்க

அதனைக் கேட்ட அனிதா, பார்க்குறதுக்கு இன்டிவிட்ஜூவல் பிளேயரா மட்டும் விளையாடுற மாதிரி தெரியலங்கறதையும் நான் இங்க சொல்லிடுறேன். வெளிலே நீங்க போடாத முகமூடியை இங்கே போட்டுட்டு வந்துருக்கீங்க..

பேச எழுந்தாலே..

பேச எழுந்தாலே..

பாதி ரியோவ மட்டும்தான் நான் இங்க காட்டுவேன், எனக்கு ட்ரோஃபி கொடுன்னா எப்படி மக்கள் கொடுப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க? கிரிட்ஸிஸம் சொல்ல ஒருத்தர் பெஞ்சுலேருந்து ஒருத்த எழுந்தாலே உட்கார வச்சுடுறீங்கங்கறதுதான் என்னுடைய கருத்து.

எக்ஸ்க்யூஸ்மி ரியோ

எக்ஸ்க்யூஸ்மி ரியோ

அதற்கு பதில் சொல்லும் ரியோ, அதுதான் இல்லன்னு நான் சொல்றேன் என்று கூறிக்கொண்டிருக்கும் போதே, குறுக்கிடும் அனிதா, எக்ஸ்க்யூஸ்மி ரியோ, நான் கேட்குற கேள்விய புரிஞ்சுக்கிட்டு நீங்க பதில் சொல்லலாம்னு நினைக்கிறேன் என்கிறார்.

கன்ட்ரோல் பண்ணிக்கிட்டேன்

கன்ட்ரோல் பண்ணிக்கிட்டேன்

இதனால் ரியோவின் முகம் அப்படியே மாறுகிறது. இருந்தாலும் வெளியே வந்ததும் குட் கால் என அனிதாவுக்கு கை கொடுக்கும் ரியோ, பெட் ரூமில் இது டாஸ்க் என்பதால்தான் நான் கன்ட்ரோல் பண்ணிக்கிட்டேன் என்கிறார். இப்படியாக உள்ளது முதல் புரமோ.

இன்னைக்கும் பஞ்சாயத்து

இன்னைக்கும் பஞ்சாயத்து

இதனை பார்த்த ரசிகர்கள், இன்னைக்கும் பஞ்சாயத்து இருக்கு என கூறி வருகின்றனர். ஏற்கனவே ரியோ மீது அனிதாவும், அனிதா மீது ரியோவும் மனஸ்தாபத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று அனிதா இப்படி பேசியிருப்பது பிரச்சனையை இன்னும் பெரிதாக்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X