முட்டையை பேஸ்ட் ஆக்கி.. அனிதாவை பல் துலக்க வச்சு.. கொடுமை கொடுத்த அர்ச்சனா.. வேற லெவல் சம்பவம்!

சென்னை: இந்த வாரம் கேப்டன் ஆகிட்டோம்னு செம ஜாலியா இருந்த அனிதாவை, ரோபோ டாஸ்க்கில் வச்சு செய்து விட்டார் அர்ச்சனா.

முட்டையை பேஸ்ட் ஆக்கி, அனிதாவை பல் துலக்க வச்சு தரமான சம்பவம் செய்து விட்டார்.

முட்டையை அர்ச்சனாவின் முகத்தில் தான் அந்த டீம் தடவினாங்க, அதையே காப்பி பேஸ்ட் பண்ணி எல்லோரையும் காலி பண்ணிட்டார்.

கேப்டன் அனிதா

கேப்டன் அனிதா

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக கெத்து காட்டி வந்தார் அனிதா சம்பத். கடந்த சில வாரங்களாகவே அனிதா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குரூபிசம் பேர் மற்றும் விஜய் டிவி புராடக்ட்களுக்கு டைட்டில் என்கிற பேர் வரக் கூடாது என்பதற்காக அனிதாவை காப்பாற்றி வருகின்றனர் என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அனிதா ரோபோ

அனிதா ரோபோ

ரோபோவாக அனிதா இருந்த நிலையில் ரியோவை பீன் பேகை காட்டி சோமசேகர் உள்ளிட்டோர் பண்ண ஃபன் காரணமாக அனிதா ஈசியாக சிரித்து தனது முதல் ஹார்ட்டை இழந்து விட்டார். அதன் பின்னர், அர்ச்சனா அனிதாவை அழைத்துச் சென்று நான் கொஞ்ச நேரம் வச்சு செய்கிறேன் என்றார்.

முட்டை எப்படி

முட்டை எப்படி

லக்சரி பட்ஜெட் இல்லை, எலுமிச்சம் பழம் வேஸ்ட் ஆகக் கூடாதுன்னு கொதிக்கும் போட்டியாளர்கள், ரோபோ டாஸ்க்கில் ஏகப்பட்ட முட்டைகளை இப்படி வேஸ்ட் பண்றாங்களே என்கிற லாஜிக்கான கேள்விகளையும் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கொளுத்திப் போட்டு வருகின்றனர்.

முட்டையை பேஸ்ட் ஆக்கி

முட்டையை பேஸ்ட் ஆக்கி

முட்டையை மோந்து பார்த்தாலே குமட்டிக் கொண்டு வரும், அதனை பிரஷ்ஷில் போட்டு பல் துலக்க சொல்வதெல்லாம் வேற லெவல் அராஜகம். நிச்சயம் இதை அர்ச்சனாவுக்கு பண்ணி இருந்தார்கள் என்றால், அவர் வேற லெவலில் சீன் கிரியேட் பண்ணி அழுது தள்ளி இருப்பார். அனிதா சம்பத் முடிந்த வரை செய்து, பின்னர் அவுட்டானார்.

Recommended Video

தப்பா நினைக்காதீங்க சித்திரா தற்கொலை பண்ணல Diya Menon Emotional #RIPChithra | FilmiBeat Tamil
திருப்பி அடிப்பார்

திருப்பி அடிப்பார்

ஏற்கனவே அர்ச்சனாவின் குரூபிசத்தால் நொந்து போயுள்ள அனிதா சம்பத், அர்ச்சனா அக்கா கேங் தன்னை இப்படி பழிவாங்கியது அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார். நிச்சயமாக இதற்கு சரியான பதிலடியை திருப்பிக் கொடுப்பார் என்றும் அனிதாவின் ஆர்மியினர் அர்ச்சனாவுக்கு எதிரான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X