எல்லோரையும் வச்சு செஞ்ச பிக்பாஸ்.. பிக்பாஸையே செஞ்ச அனிதா.. வேற லெவல் பர்ஃபாமன்ஸ்!

சென்னை: பிக்பாஸின் 60 நாள் டாஸ்க்கில் பிக்பாஸை பேசவே விடாமல் பட்டையை கிளப்பினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் 60 நாளை கடந்தது. இதனை தொடர்ந்து 60 நாளில் என்ன செய்தீர்கள் என்று ஒவ்வொருவராய் அழைத்து கேட்டார் பிக்பாஸ்.

நேற்று முன்தினம் ரமேஷ், ஆஜித், சோம், கேபி, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன் ஆகியோரை அழைத்து அசிங்கப்படுத்தினார் பிக்பாஸ்.

செட்டப் நல்லாருக்கு

செட்டப் நல்லாருக்கு

இந்நிலையில் நேற்றைய எபிசோடில், அனிதா ஆக்ட்டிவிட்டி ஏரியாவுக்குள் சென்றார். அப்போது பிளட் டெஸ்ட் எடுக்கவா இவ்ளோ செட்டப் என்று மோசமாக சிரித்தப்படியே கேட்டார். தொடர்ந்து இந்த செட்டப் நல்லாருக்கு பிக்பாஸ் என்று கூறி சுற்றும் முற்றும் பார்த்தார் அனிதா.

சுத்திப்பார்த்த போதும்

சுத்திப்பார்த்த போதும்

இதனை கவனித்த பிக்பாஸ், அனிதா சுத்திப்பார்த்தது போதும், வந்து உட்காருங்க என்றார். தொடர்ந்து 60 நாளில், பிக்பாஸ் வீட்டில் நீங்கள் செய்தது என்ன என்று கேட்டார் பிக்பாஸ். அதற்கு வழக்கம் போல் மளமளவென கொட்டித் தீர்த்தார் அனிதா.

மகிழ்வித்து மகிழ்

மகிழ்வித்து மகிழ்

மகிழ்வித்து மகிழ் என்ற அடிப்படையில் நானும் மகிழ்ச்சியா இருந்து மற்றவர்களையும் மகிழ்ச்சி படுத்தியிருக்கேன். இந்த வீட்டுல வந்ததுமே எல்லாரையும் பிடிச்சுது. தவறு நடக்கும்போது எதிர்த்து குரல் கொடுத்திருக்கேன். வேக்கப் டான்ஸ் காலையிலே ஆடியிருக்கேன்.

நிறைய அழுதிருக்கேன்

நிறைய அழுதிருக்கேன்

எல்லா டாஸ்க்கையும் கரெக்ட்டா செஞ்சுருக்கேன். குறிப்பா சுரேஷ் கூட டான்ஸ் ஆடினது. அவ்ளோ சண்டை இருந்தபோதும் அவர் கூட என்ஜாய் பண்ணி பர்ஃபாம் பண்ணினேன். நிறைய இடத்துல அழுதிருக்கேன்.. மக்கள மூடு அவுட் பண்ணியிருக்கேன்.

வம்பை வாங்கியிருக்கேன்

வம்பை வாங்கியிருக்கேன்

அதுக்கப்புறம் என்னையே நான் மாத்தியிருக்கேன், இனி வரும் நாட்கள் அதையே சிறப்பா செய்வேன், பாடுவேன், ஆடுவேன், டாஸ்க்கெல்லாம் செய்வேன். ஃபன்னியா நியூஸ் ரீடிங் பண்ணி வம்பை விலைக்கு வாங்கியிருக்கேன். முன்னெல்லாம் நிறைய பேசுவேன். இப்போ குறைச்சிட்டேன்.

Recommended Video

அந்த SECRET 48 HOURS PRECAUTION | ACTRESS PRIYA PRINCE CHAT PART-01 | FILMIBEAT TAMIL
4 லைன்தான் பேசுறேன்

4 லைன்தான் பேசுறேன்

நிறைய பேரை ரொம்ப லென்த்தியா பேசு மூடு அவுட் பண்ணியிருக்கேன். முன்னாடி 40 லைன் பேசினேன், இப்போலாம் 4 லைன்தான் பேசுறேன். சரியான ஆட்களை தேர்வு செஞ்சு நாமினேட் பண்ணியிருக்கேன். ரொம்ப குறைவாதான் பண்ணியிருக்கேன் பிக்பாஸ் என்றார். அனிதா பேசியதைக் கேட்ட பிக்பாஸ் நீங்க கிளம்பலாம் அனிதா என்று வெளியே அனுப்பினார்.

பிக்பாஸையே செஞ்சுட்டாரு

பிக்பாஸையே செஞ்சுட்டாரு

மற்ற ஹவுஸ்மேட்ஸ் பேசும் போது அவர்களை வார்தைக்கு வார்த்தை அசிங்கப்படுத்திய பிக்பாஸ் அனிதா பேசும் போது மட்டும் மவுனம் காத்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள், 60 நாட்கள்ல டாஸ்க்ல பிக்பாஸ் எல்லோரையும் வச்சு செஞ்சாரு. ஆனா அவரையே வச்சு செஞ்சது அனிதா தான் என்ற கலாய்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X