ராமசாமி அண்ணனாக மாறிய அனிதா.. ரொம்ப எதிர்பார்த்தோம்.. இப்படி கோட்டை விட்டுட்டீங்களே!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் நள்ளிரவில் குல்ஃபி விற்கும் டாஸ்க்கை பார்த்த ரசிகர்கள் இது ஒன்னுதான் குறைச்சல் என விளாசியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக மணி கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் 45 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. நள்ளிரவிலும் டாஸ்க்குகள் தொடர்ந்து நடைபெற்றது.

குல்ஃபி டாஸ்க்
இதன் ஒரு பகுதியாக தூங்குபவர்களை எழுப்பும் வகையில் நடு ராத்திரி ஒரு மணிக்கு குல்ஃபி விற்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. நேற்றைய எபிசோடில் மாலை 6 மணிக்கு சுண்டல் விற்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது போல் இன்று குல்பி விற்கும் டாஸ் கொடுக்கப்பட்டது.

ராமசாமி அண்ணன்
இதற்கான கண்டிஷன்களும் நேற்றைப் போலவே பிக்பாஸ் வீட்டில் உள்ள டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அதன்படி சைக்கிளில் வரும் ராமசாமி அண்ணன் 30 செகண்ட்தான் இருப்பார். அதற்குள் குல்ஃபி வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்.

சொதப்பலோ சொதப்பல்
இதனை தொடர்ந்து சொன்னது போலவே ஒரு மணிக்கு பிக்பாஸ் வீட்டின் ஸ்டோர் ரூமில் சைக்கிளுடன் குல்ஃபி வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து வந்த அனிதா சொதப்பலோ சொதப்பல் என சொதப்பி விட்டார்.

டிஸ்அப்பாயிண்ட்டட்
நேற்றைய பிளாக் வொய்ட் டாஸ்க்கில் பட்டைய கிளப்பிய அனிதா இன்றைய டாஸ்க்கிலும் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குல்ஃபிக்காக வாயை திறக்காமல் டோட்டலாய் டிஸ்அப்பாயிண்ட்டட் செய்துவிட்டார்.
Recommended Video

குல்ஃபி தேவைதான்
குல்ஃபி சாப்பிடுவதில்தான் ஆர்வம் காட்டினார் அனிதா. அதனை பார்த்த ரசிகர்கள் நேற்று பாலாஜி விற்றதே பரவாயில்லை என்று கூறி வருகின்றனர். இன்னும் சிலர் இவர்கள் கிழிக்கும் கிழிக்கு மிட்நைட்டில் குல்ஃபி தேவைதான் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











