பிரபாவ உடைக்க மாட்டேன்.. போகும் போதும் பிக் பாஸிடம் சண்டை பிடித்த அனிதா சம்பத்.. ஒருத்தர் அழலையே!
சென்னை: இரண்டாவது வாரத்திலேயே நடிகை ரேகா வெளியேறும் போது ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் அழுதனர். ஆனால், 84 நாட்கள் உடன் இருந்து விட்டு அனிதா போகும் போது ஒருத்தர் கூட அழவில்லை.
அர்ச்சனா கடந்த வாரம் வெளியேறியதும் சோமசேகர் அப்படி அழுதார். ஆனால், தனது தோழி அனிதா வெளியேறிய நிலையில், ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை.
எல்லாத்துக்கும் மேலாக தனது சிங்க முகம் போட்ட உண்டியலை உடைக்க மாட்டேன் என அனிதா பண்ண அலம்பல் தான் சன் டே எபிசோடின் ஹைலைட்.

அன்பு கேங் அழவில்லை
அன்பு கேங்கில் இருந்து கடந்த வாரம் அர்ச்சனா வெளியேறியதும் அப்படி அழுத சோமசேகர், தனது தோழியான அனிதா சம்பத் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், துளி கூட அழாதது ஏன் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். நிஷா, அர்ச்சனாவை வெளியேற்றியதே அனிதா தான் என்கிற காண்டு என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

பாலாவுக்கு அந்த சந்தோஷம்
இந்த வாரமும் ஆஜீத் மற்றும் ஷிவானி சேவ் ஆகிவிட்டார்கள் என்கிற சந்தோஷம் தான் பாலாஜி முருகதாஸுக்கு, அனிதா வெளியேறியது குறித்து ரம்யா பாண்டியன் உள்ளிட்ட யாருக்குமே அந்த வீட்டில் வருத்தம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அனிதாவும் இங்கிருந்து எஸ்கேப் ஆனதே போதும் என ஹேப்பியாகவே வெளியேறினார்.

அர்ச்சனா இருந்திருந்தால்
ஒருவேளை அர்ச்சனா இந்த வாரமும் இருந்திருந்தால், அனிதா சம்பத் சென்றதற்கு நிச்சயமாக அவர் அழுதிருப்பார். அவர் உண்மையாகவே அனைவர் மீதும் அன்பு கொண்டவர் எனவும் பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆரிக்கு தன்னால் தான் அனிதா வெளியேறி விட்டாரோ என்கிற கில்டி தோன்றி விட்டது.

பிரபாவை உடைக்க மாட்டேன்
அனிதா சம்பத், ஏற்கனவே தனது சிங்க முகம் போட்ட உண்டியலில் இருந்த காயின்களை எடுத்து வைத்துக் கொண்டு மற்ற ஹவுஸ்மேட்களுக்கு கொடுத்தார். ஆனால், பிக் பாஸ், இத்தனை நாட்கள் ரூல்ஸ் ஃபாலோ பண்ண நீங்க இப்போவும் ஃபாலோ பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன் என்றார். அதற்கு அது என் பிரபா பிக்பாஸ். அப்படி நான் நினைச்சி வச்சிருக்கேன். அந்த உண்டியலை உடைக்க முடியாது பிக் பாஸ் என்றார்.

பிக் பாஸிடம் வாக்குவாதம்
இந்த வாரம் ஆரியுடனும் பாலாவுடனும் அப்படி வாக்குவாதம் செய்த அனிதா சம்பத், கடைசியாக உண்டியல் உடைக்கும் விஷயத்தில் பிக் பாஸிடமே கடும் வாக்குவாதம் நடத்தினார். ஆனால், கடைசியில் அனிதாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், உடைந்த உண்டியலை ரம்யா பாண்டியனிடம் கொடுத்து பத்திரப்படுத்தினார் அனிதா.

பாலாவுக்கு உத்தரவு
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக இருக்கும் பாலாஜி முருகதாஸுக்கு உடனே பிக் பாஸ் உண்டியலை உடைக்கும் உத்தரவை போட்டார். உடனே, சிங்க முகம் உடையாமல், உண்டியலை உடைத்துத் தருகிறேன் என அனிதாவுக்கு வாக்குக் கொடுத்து விட்டு பாலாவும் அழகாக உண்டியலை உடைத்துக் கொடுத்தார்.

ஹவுஸ்மேட்களை கட்டியணைத்து
ஏஞ்சல் வந்தாலே பாடலுக்கு நடனமாடி விட்டு, பிக் பாஸ் வீட்டில் கடைசியாக செய்தி ஒன்றை வாசித்து விட்டு, தான் சந்தோஷமாக வெளியேறுவதாக சொன்ன அனிதா சம்பத், மற்ற ஹவுஸ்மேட்களை கட்டியணைத்து அனைவரது வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு வெளியேறினார்.

ரசிகர்கள் மிஸ் பண்ணுவார்கள்
நிச்சயம் அனிதா சம்பத் போன்ற ஒரு போட்டியாளரை இன்னும் உள்ள மூன்று வாரத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் ரொம்பவே மிஸ் பண்ணுவார்கள், வரும் வாரம் ஆரி கேப்டனாக உள்ள நிலையில், நாமினேஷனில் அவருக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஷிவானி அல்லது ஆஜீத் தான் இந்த முறை வெளியேற்றப்படுவார்கள் என மீண்டும் ரசிகர்கள் நம்புகின்றனர்.
Recommended Video

அடுத்த வாரம் நான் தான்
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ஜோசியக்காரர்கள் உருவாகி வருகின்றனர். அனிதா சம்பத் வெளியேறியதும், அடுத்த வாரம் நான் தான் வெளியே வந்து பார்க்கிறேன் என பாலாஜி முருகதாஸ் இப்பவே பிரெடிக்ட் பண்ண ஆரம்பித்து விட்டார். ஆரி சேவ் செய்யப்பட்ட நிலையில், விஜய் டிவியில் அதிகம் டச் இல்லாத ஒரு நபராக பாலா இருப்பதனால் அப்படி சொல்கிறாரோ என ரசிகர்கள் இப்போதே அடுத்த வார எவிக்ஷனை கணிக்க ஆரம்பித்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











