ஏன் தைரியமில்லாம போறீங்க.. ரியோவை சீண்டும் அனிதா.. வேற லெவல் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வேற லெவலில் உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஓபன் நாமினேஷன் நடைபெறுவது முதல் புரமோவில் தெரியவந்தது.
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

ரியோ பதில்
இதில், சனிக்கிழமை எபிசோடில் அனிதா கமல்ஹாசனிடம் தன்னை ஜெயிலுக்கு அனுப்பியது நியாயமே இல்லை என்று ஆவேசமாக பேசியதை குறித்து பதிலளிக்கிறார் ரியோ. அதாவது தனி ஆளா நின்னு சமைச்சேன்னு ரொம்ப ஆக்ரோஷமாக வெளிப்படுத்துனாங்க.

அதற்காக பண்ணல
அவங்க கேட்ருந்தாங்கன்னா கண்டிப்பா மத்தவங்க வேலை பண்ணிருப்பாங்க. இதை நான் பதிவு பண்ணணும்னு நினைச்சேன். ஆனா இந்த காரணங்களுக்காக நான் அனிதாவ நாமினேட் பண்ணல என்று கூறிவிட்டு செல்கிறார்.

என்கிட்ட பேசுங்க
இதை கவனித்த அனிதா, உங்களுக்கு என்ன பிரச்சனை என்கிட்ட பேசுங்க என்கிறார். அதற்கு உங்கக்கிட்டதான் பேசுகிறேன் என்கிறார் ரியோ. அதற்கு அங்க நின்னு பேசினா பதில் சொல்ல மாட்டாங்கன்னு நினைச்சு பேசாதீங்க என்கிறார் அனிதா.

வாட் டூ யூ மீன்?
அதை நான் உன்கிட்டதான் கத்துக்கிட்டேன் என்றப்படியே நகருகிறார் ரியோ. அப்போதும் விடாத அனிதா, ஏன் தைரியம் இல்லாத போறீங்க என்று கேட்கிறார். இதனால் கடுப்பான ரியோ வாட் டூ யூ மீன் என்று அனிதாவிடம் எகிறுகிறார்.

இங்க வச்சுக்காதீங்க
தைரியம் இல்ல என்ற வார்த்தையெல்லாம் இங்க வச்சுக்காதீங்க என்கிறார் ரியோ. அதற்கு நீங்க அப்படிதான் நடந்து போறீங்க என்று கூறுகிறார் அனிதா. நான் இங்கதான் இருக்கேன் நான் என்ன கதவை தாண்டி வெளியேவா போயிட்டேன் என்று கத்துகிறார்.
Recommended Video

மிரட்டல் புரமோ
இதனை பார்த்த அனிதா, ஏன் கத்துறீங்க என்று கேட்டு வெறுப்பேற்றுகிறார். அப்போது நான் இங்கதான் இருக்கேன். தைரியம் இல்லாம பேசுறேன்னு சொல்றீங்க பார்த்து பேசுங்க. என்று கூறுகிறார். இப்படியாக உள்ளது இன்றைய இரண்டாவது புரமோ.


Click it and Unblock the Notifications











