பொண்டாட்டிய சொன்னதும் அனிதா புருஷனுக்கு வந்த கோபத்த பாருங்க.. டான்ஸ் மாஸ்டருடன் மல்லுக்கட்டிய பிரபா!
சென்னை: அனிதா சம்பத் சொன்ன ஸ்டோரி எமோஷனலாக இல்லை என்று கூறிய டான்ஸ் மாஸ்டர் சதீஷை சரமாரியாக விளாசியிருக்கிறார் அனிதாவின் கணவரான பிரபாகரன்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் எடுத்த எடுப்பிலேயே சுரேஷ் சக்கரவர்த்தியை சீண்டி பெயரை கெடுத்துக் கொண்டார்.
வயதில் மூத்தவரான சுரேஷ் சக்கரவர்த்தியிடம் அனிதா சம்பத் நடந்து கொண்ட விதமும் காட்டிய ஆட்டியூடும் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

கழுவி ஊற்றுகின்றனர்
இதனால் சமூக வலைதளங்களில் கன்னா பின்னாவென கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள். அனிதா சம்பத்துக்கு ஓட்டே போட மாட்டோம், அவர் எவிக்ஷனுக்கு வந்தால் முதல் ஆளாய் வெளியேற்றப்படுவார் என்றும் நெட்டிசன்கள் வெறுப்பை கக்கி வருகின்றனர்.

ஏன் இந்த சில்ற புத்தி?
போதாகுறைக்கு அனிதா சம்பத்தின் அப்பா தன்னை ஒரு பத்தாம் வகுப்பு மாணவனை போல் காட்டிக் கொண்டு சமூக வலைதளங்களில் அனிதாவுக்கு நல்லப் பெயர் வாங்கிக் கொடுக்க முயற்சி செய்தார். ஆனால் அதனை கண்டுப்பிடித்த நெட்டிசன்கள் இந்த சில்ற புத்தி ஏன் உங்களுக்கு என கடுமையான விமர்சித்தனர்.

கண்ணீர்விட்ட அனிதா
இந்நிலையில் அனிதா சம்பத்தின் கணவரான பிரபாகரன் தனது மனைவி குறித்து பேசிய டான்ஸ் மாஸ்டர் சதீஷை கடுமையாக விளாசியுள்ளார். அதாவது கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற கடந்து வந்த பாதை டாஸ்க்கின் போது, தான் பட்ட கஷ்டங்களையும், தான் நடையாய் நடந்ததையும் கண்ணீர் மல்க கூறினார்.

கவனத்தை பெறவில்லை
ஆனால் அதற்கு முன்பே அனிதா சம்பத் தனது பெயரை டேமேஜ் செய்துக் கொண்டதால் அவர் படபடவென பேசிய பேச்சு அந்தளவுக்கு கவனத்தை பெறவில்லை என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வந்தனர். அதையே டான்ஸ் மாஸ்டரான சதீஷும் கூறியிருந்தார்.

எமோஷனல் இல்லை
அதாவது, அனிதா சம்பத் கதை முடிந்து விட்டது. அவரது சொன்ன கதையில் எந்த எமோஷனலும் இல்லை சோகமும் இல்லை. எல்லாரும் ஓடிடுவாங்க இப்படி விடாம பேசினா. பாக்குறதுக்கு ஓடிக்கிட்டே இருங்க என்பதை போல் உள்ளது. இந்த கோவிட் பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது, தயவு செய்து அமைதியாய் இருங்கள்.. என பதிவிட்டிருந்தார் சதீஷ்.

கடுப்பான கணவர்
இதனை பார்த்து கடுப்பான அனிதாவின் கணவரான பிரபாகரன், சதீஷை ஆணவத்துல ஆடாத என கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஏன்டா நீங்க பசின்னா என்னன்னு தெரியாம வளர்ந்து இருந்தா கண்டிப்பா உங்களுக்கு அடுத்தவன் பசிய தெரிய வாய்ப்பு இல்ல...

ஆணவத்துல ஆடாதீங்க
இப்படிதான் அடுத்தவன் அனுபவச்ச பசியையும் வலியும் கூட கிண்டல் பண்ண தோனும். பின்குறிப்பு: கோரியோகிராஃபர்ன்னா டான்ஸ் ஆடலாம்டா.. ஆணவத்துல ஆடாதீங்க.. என விளாசியுள்ளார். ஆனால் பிரபாகரனின் இந்த பதிலடிக்கும் பதிலளித்துள்ளார் சதீஷ்.

பிபி மாத்திரை வாங்கிக்குங்க
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சோகமான ஸ்டோரி மத்தவன்கிட்ட சொன்னா சோகமாதான் இருக்கும்ன்னு நினைச்சா என்னன்னு சொல்றது? ப்ளீஸ் இது சோகமான ஸ்டோரி நம்புங்கன்னு கணவன் கெஞ்சினா என்ன சொல்ல? உங்க ஆட்டம் என்ன ஆட்டம்ன்னு தெரியல.. அவங்க உள்ள அழுவுறதும் நீங்க வெளிய அழுவுறதும் எப்பா சாமி.. பிபி மாத்திரை வாங்கி வச்சுக்கோங்க.. இவ்வாறு சதீஷ் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











