மோதிர விரலாலதான் குட்டு வாங்கினேன்.. கடைசியில் கமலையே கேசில் சிக்க வைக்க பார்த்த அனிதா!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனிதாவை நடிகர் கமல்ஹாசன் வெளுத்துவிட்டுதான் அனுப்பினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒருவர் வெளியேற்றப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் ஞாயிற்றுக் கிழமையான நேற்று அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தனது பெயரை கமல் காட்டிய போது உள்ளுக்குள் வேதனை இருந்தாலும் ஏற்கனவே எதிர்பார்த்ததை போன்று நடந்து கொண்டார்.

உண்டியலை கணவராக நினைத்து

உண்டியலை கணவராக நினைத்து

பிக்பாஸ் கொடுத்த உண்டியலை தனது கணவராக நினைத்ததாக கூறி உடைக்க மறுத்து முன்கூட்டியே வெளியே எடுத்து வைத்திருந்த காயின்களை ஹவுஸ்மேட்ஸிடம் கொடுத்தார். பிக்பாஸ் எவ்வளவோ சொல்லியும் உண்டியலை அனிதா உடைக்க மறுத்ததால் வீட்டின் கேப்டனான பாலாவிடம் உடைக்க சொன்னார் பிக்பாஸ்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா

தீதும் நன்றும் பிறர்தர வாரா

அப்போது உண்டியலில் விரிசல் விழுந்ததால் கண்ணீர்விட்டார் அனிதா. தொடர்ந்து வெளியே வந்த அனிதாவிடம், நீங்கள் பல முறை விளிம்பில் இருந்தீர்கள். ஆனாலும் 2 வாரங்கள் உங்களை நல்ல நிலையில் வைத்திருந்தார்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றார் கமல்.

குட்டு வாங்கினாலும்..

குட்டு வாங்கினாலும்..

அதற்கு பதில் சொன்ன அனிதா, எனக்கு இதுவே அதிகம் சார். 2 வாரங்கள் இருப்பதே கஷ்டம் என்று நினைத்தேன். 84 நாட்கள் இருந்துள்ளேன். இத்தனை நாட்கள் இருந்தது எனக்கு வரப்பிரசாதம்தான் சந்தோஷம் தான். குட்டு வாங்கினாலும் மோதிர விரலால் குட்டு வாங்க வேண்டும் என்று கூறுவார்கள்.

நான் திட்டவே இல்லையே..

நான் திட்டவே இல்லையே..

அந்த மாதிரி பிக்பாஸ்ல நான் திட்டு வாங்கினாலும் உலக நாயகன் வாயால்தான் திட்டு வாங்கியுள்ளேன் என்றார். அதைக் கேட்டு பதறிய கமல் நான் உங்களை திட்டவே இல்லையே என்றார். உடனே இல்லை சார் திருத்தங்கள் சொல்வீர்கள் இல்லையா அதை சொன்னேன் என்றார் அனிதா.

கற்றுக்கொண்ட பாடம்?

கற்றுக்கொண்ட பாடம்?

மேலும் அந்த வீடு அப்படி ஆக்கிவிடுகிறது. அந்த வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள்தான் அப்படி நம்மை மாற்றி விடுகிறது. வெளியே வந்த பிறகு ச்சை இவ்ளோதானா என்று தோன்றுகிறது என்றார். இதைத்தொடர்ந்து இதிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன என்று கேட்டார் கமல்.

கசப்புடன் போகாதீர்கள்

கசப்புடன் போகாதீர்கள்

அதற்கு ஓவர் எமோஷன் ஆகக்கூடாது என்று கற்றுக்கொண்டேன் என்று கூறினார் அனிதா. அதற்கு கைத்தட்டிய கமல் வாழ்த்துகள் என்றார். மேலும் உங்களை பல முறை பாராட்டியிருக்கிறேன் அதனால் கசப்புடன் வெளியே போகாதீர்கள் என்றார்.

திரிசூலம்தான் இல்ல..

திரிசூலம்தான் இல்ல..

மேலும் நீங்கள் சீக்கிரம் கண்ணீர் விடுவதையும் பார்த்திருக்கிறேன் சந்தோஷப்படுவதையும் பார்த்திருக்கிறேன் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய கமல், திட்டுறது மட்டும் இல்ல ஆரிக்கிட்ட நாக்கலாம் துருத்திட்டிங்க திரிசூலம் மட்டும்தான் இல்ல என்று வெளுத்துவிட்டார்.

பாலாக்கிட்ட கேட்காதீங்க..

பாலாக்கிட்ட கேட்காதீங்க..

தொடர்ந்து தன்னுடைய பிக்பாஸ் பயண வீடியோவை பார்த்து கண்ணீர்விட்ட அனிதா, பின்னர் ஹவுஸ்மேட்ஸை சந்தித்தார். அப்போது ரம்யாவிடம் உப்புமாவில் உப்பு கம்மியாபோடு என்றார். ஆஜித்திடம் ஓபன் அப் ஆகுங்க என்ற அனிதா, எல்லா சஜ்ஜஷனையும் பாலாஜிக்கிட்ட கேட்டு வைக்கணும்னு நினைக்காதீங்க என்றார்.

ஹனிமூனுக்கு வண்டிய விடுங்க

ஹனிமூனுக்கு வண்டிய விடுங்க

மேலும் பாலாஜியிடம் மிஸ் யூ டா என்ற அவர், ஆரியிடம் நல்லா விளையாடுங்க, உங்களுக்கு அதுவே போதும் நீங்க நல்லாதான் விளையாடுறீங்க என்றார். அதனைக் கேட்ட ஆரி, நான் இங்கு சொன்னதுதான். எப்போதும் சகோதரனாக இருப்பேன். டிவியை பார்த்து எதையும் போட்டு கன்ஃபியூஸ் பண்ணிக்காதீங்க. ஹனிமூனுக்கு வண்டிய விடுங்க என்றார்.

அனிதா அட்வைஸ்

அனிதா அட்வைஸ்

அதற்கு பதில் சொன்ன அனிதா, முதல் வேலையே அதுதான், என்றார். தொடர்ந்து ஷிவானி சோம், கேபி, ரியோ ஆகியோரை நல்லா விளையாடுமாறு கூறிய அனிதா கஷ்டப்படும் இளைஞர்களுக்கு அட்வைஸ் கூறினார்.

Recommended Video

விஜய் கூட DANCE ஆட முடியாது | ACTRESS MEGHA AKASH CHAT PART - 02 | Filmibeat Tamil

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X