புரமோவுல காட்டினது சரிதான்ப்பா கேப்டன் டாஸ்க்கில் கெத்துக்காட்டிய அனிதா.. எவிக்ஷனில் இருந்து எஸ்கேப்
சென்னை: பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் டாஸ்க்கில் வெற்றி பெற்ற அனிதா கேப்டனாகியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் கேப்டன் டாஸ்க் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் நேற்று கேப்டன் டாஸ்க் நடைபெற்றது.

கேப்டன் டாஸ்க்
இந்த கேப்டன் டாஸ்க்கில் முதல் முறையாக அனைத்து போட்டியாளர்களும் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆக்டிவிட்டி ஏரியாவில் கேப்டன் டாஸ்க் நடைபெற்றது. அங்குள்ள டிவியில் சில போட்டோக்கள் ஒளிபரப்பப்படும்.

வெற்றியாளர்
சில நொடிகள் இருக்கும் அந்த போட்டோக்கள் மறைந்த பின் பிக்பாஸிடமிருந்து அது தொடர்பாக கேள்விகள் கேட்கப்படும் இதில் கடைசி வரை சரியான பதிலை சொல்லும் போட்டியாளரே வெற்றியாளர் என அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது.

அனிதா வெற்றி
இதனை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இரண்டு இரண்டு பேராக பங்கேற்றனர். ஒவ்வொரு ரண்டிலும் வெற்றி பெறும் நபர் அடுத்த ரவுண்டுக்கும் புரமோட் ஆனார். தோற்ற நபர் போட்டியிலிருந்து வெளியேறினார். இதில் பிக்பாஸ் கேட்கும் கேள்விக்கு அனிதா சரியான பதிலை சொல்லி ஒவ்வொரு ரவுண்டிலும் வெற்றி பெற்றார்.

அனிதாவுக்கு வாழ்த்து
இறுதியில் அனிதாவும் நிஷாவும் பங்கேற்றனர். இதில் அனிதா வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவராக அனிதா வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் அனிதாவை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

தப்பித்த அனிதா
நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே இந்த வாரம் நான்தான் வெளியே போவேன் என்று புலம்பினார் அனிதா. ஆனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனான அனிதா எவிக்ஷன் புராசஸில் இருந்து தப்பித்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











