ஷிவானியையும் அழ விட்ட அனிதா.. பாலாஜியுடனும் செம மல்லுக்கட்டு.. அதிரடி புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பால் கேட்ச் டாஸ்க்கின் நான்காம் சுற்று காட்டப்பட்டது.
இதில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தங்கப்பந்துகள் கொடுக்கப்பட்டு ஸ்பெஷல் சக்தி கொடுக்கப்பட்டதும் தெரிய வந்தது.

வொர்ஸ்ட் பர்ஃபார்மர்
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் இந்த வாரம் வொர்ஸ்ட் பர்ஃபாமருக்கான நாமினேஷன் நடைபெறுவது தெரிய வந்துள்ளது.

அனிதா நாமினேஷன்
இதில் பேசும் அனிதா, பாலாஜியின் கேப்டன்சி மீது குறை சொல்கிறார். ஒரே ஒரு இடத்துல பார்ட்ஷியாலிட்டி பார்த்தா மாதிரி இருந்துச்சு. அது என்ன என்று கேட்டார் பாலாஜி. அதற்கு கேபி, சோம் தூங்கினதை மட்டும் ஃபிராங்க்கா சொன்னீங்க.

ஷிவானி பெயரை சொல்லவில்லை
ஆனால் ஷிவானி தூங்கினதை சொல்லவே இல்லை என்று பாலாஜியிடம் மல்லுக்கு நிற்கிறார். அதனை மறுக்கும் பாலாஜி, நானும் ஷிவானியும் தூங்கியதாக சொன்னேன் என்று கூறுகிறார்.

எனக்கு தோனுவதை பேசுவேன்
ஆனால் அதனை மறுக்கும் அனிதா, நான்தான் இங்கே நாமினேட் பண்ணிட்டு இருக்கேன். அதனால நான் என்ன ஃபீல் பண்ணறேனோ அதைத்தான் நான் பேச முடியும் என்றார். நாமினேட் பண்ணும் போது குறுக்கிடாதீங்க பாலா என்று அதட்டுகிறார்.

பொய் சொல்றீங்க..
நீங்கதான் என்கிட்ட சொன்னீங்க.. நாமினேட் பண்ணும் போது யாரும் பேசக்கூடாதுன்னு என்று பாலாஜிக்கு பதிலடி கொடுக்கிறார். அதற்கு பதில் பேசும் பாலாஜி, நீங்க பொய் சொல்லும் போது நான் அதை திரும்பி சொல்லலாம் என்கிறார்.

உங்களை சொல்லக்கூடாதா?
அதற்கு பொய்யெல்லாம் சொல்லல.. உங்களை மட்டும் எதுவும் சொல்லக்கூடாதா பாலா என்று எகுறுகிறார். நீங்க மட்டும் எல்லார் பேரையும் சொல்வீங்க.. உங்களை எதுவும் சொல்லக்கூடாதா என்கிறார். இப்படியாக உள்ளது இன்றைய இரண்டாவது புரமோ.


Click it and Unblock the Notifications











