ரியோவின் குரூபிஸத்தை கிழித்துத் தொங்கவிட்ட அனிதா.. ஐ எம் நாட் என பதில் சொல்லாமல் கத்திய ரியோ!

சென்னை: நிஷாவுக்கும், அர்ச்சனாவுக்கும் ரியோ ஃபேவரிசம் காட்டி தன்னை கண்ணாடி சிறைக்குள் அடைத்து விட்டனர் என அனிதா சம்பத் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார்.

அனிதாவின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறும் விதமாக வந்த ரியோவை வசமாக பிடித்துக் கொண்டு அனிதா சம்பத் கேள்விகளால் துளைத்து எடுத்தார்.

அனிதாவும் நிஷாவும் பேசிக் கொண்டு இருக்கையில் அர்ச்சனா அக்கா லவ் பெட்டில் படுத்துக் கொண்டு கொடுத்த கவுன்ட்டர்கள் தான் பிக் பாஸ் ரசிகர்களை ரொம்பவே எரிச்சல் அடைய செய்தது.

இது அநியாயம்

இது அநியாயம்

இந்த வாரம் கேப்டனாக தேர்வான அனிதா சம்பத்தை போரிங் போட்டியாளர் என ஜெயிலுக்குள் ஹவுஸ்மேட்ஸ் தள்ளியதை அவரால் கொஞ்சம் கூட ஏற்கவே முடியவில்லை. நீங்க எப்படி ரியோ நிஷாவை விட்டு என்னை போரிங்னு நாமினேட் பண்ணுவீங்கன்னு ரியோவை வம்படியாக பிடித்துக் கொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

அர்ச்சனா தான் போரிங்

அர்ச்சனா தான் போரிங்

அர்ச்சனா அப்பா பத்தி நிஷா அக்கா பேசியவுடன் அழுது அந்த இடத்தையே போரிங் ஆக்கவில்லையா? அவங்களை ஏன் போரிங் போட்டியாளர் என நாமினேட் பண்ணல என ரியோவை மட்டும் டார்கெட் செய்து அனிதா கேட்க ஆரம்பித்தார்.

எனக்கு புடிக்கல

எனக்கு புடிக்கல

நிஷா பண்ணது எனக்கு கொஞ்சம் கூட புடிக்கல.. புடிக்கல என்பதற்கும் போரிங்குக்கும் வித்தியாசம் இருக்கு.. நிஷா பண்ணது ரொம்ப தப்பு அது எனக்கு புடிக்கவே இல்லை. ஆனால் நீ பண்ணது ரொம்ப போரிங்கா இருந்தது அதான் நான் சொன்னேன் என ரியோ ராஜ் மீண்டும் அனிதாவை மொக்கைப் படுத்தும் விதமாகவே விளக்கம் கொடுத்தார்.

ஒன்சைடு

ஒன்சைடு

கேப்டன் டாஸ்க்கில் நான் சிறப்பா பண்ணலையான்னு கேட்ட அனிதாவிடம், நான் கேப்டன் டாஸ்க்கை இதில் சேர்க்கல என நிஷாவுக்கு சப்போர்ட்டாகவே தொடர்ந்து ரியோ பேசியதும், கடுப்பான கன்னுக்குட்டி, எல்லாத்தையும் சேர்த்துத்தான் சொல்லணும், அப்பன்னா நீங்க தப்பா சொல்லியிருக்கீங்க என ரியோவிடம் எகிற, தேங்க்யூ அனிதா என எஸ்கேப் ஆக ரியோ முயன்றார்.

ஓடிடுவாரு ரியோ

ஓடிடுவாரு ரியோ

வாரம் ஃபுல்லா நடந்ததை வச்சித்தான் சொல்லணும், பத்தியா.. கரெக்ட் பாயின்ட் பேசுனா ஓடிடுவாரு.. இதுதான் ரியோ என ரியோவை டோட்டல் டேமேஜ் பண்ணி விட்டார் அனிதா சம்பத். உடனே அந்த இடத்தில் வந்து நின்ற ரியோ, நான் எங்கேயும் ஓடல சொல்லும்மா என மறுபடியும் அனிதாவை கிளறிவிட்டார்.

அவ்வளவு ஆத்திரம்

அவ்வளவு ஆத்திரம்

நீங்க உங்க பிரெண்ட்ஸ்களுக்காகத்தான் விளையாடுறீங்க என்கிற குற்றச்சாட்டையும் பகிரங்கமாக முன் வைக்க, ஐ எம் நாட்.. ஐ எம் நாட் என குரலை உசத்தி, அனிதாவை பயமுறுத்தும் தொனியில் ரியோ கத்துவதை பார்த்தால் அனிதா மீது ரியோவுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்து விட்டதை உணர முடிகிறது. தரமான சம்பவம் பண்ணிட்டாங்க அனிதா என நெட்டிசன்கள் அனிதாவுக்கு ஆதரவாகவே கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

Recommended Video

பெண்களுக்கு முடிவெடுக்கும் உரிமை கூட தரமாட்றாங்க | ACTRESS LAKSHMI DEVY CHAT P-01 | FILMIBEAT TAMIL
அர்ச்சனா கவுன்ட்டர்

அர்ச்சனா கவுன்ட்டர்

அனிதாவும் ரியோவும் பேசிக் கொண்டு இருக்கையில், அர்ச்சனா அக்கா கொடுத்த கவுன்ட்டர்கள் தான் ரசிகர்களை ரொம்பவே இரிடேட் ஆக்கியது. எப்போ பாரு பிரச்சனை பண்ற அனிதா கிட்ட இப்போ ரியோ ஏன் போய் பேசணும் என்றும், பாலா இந்த விவகாரத்தில் ஏன் தலையிடணும்னு கேட்டுவிட்டு, அதன் பிறகு அவரே போய் அனிதாவிடம் பேசுவது என்ன லாஜிக் என்றே தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X